Friday, January 16, 2026
HomeSai Baba Songsசாய் சரணம் பாபா சரணம் சரணம் | sai saranam baba saranam saranam

சாய் சரணம் பாபா சரணம் சரணம் | sai saranam baba saranam saranam

Sai Saranam Baba Saranam Saranam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சாய் சரணம் பாபா சரணம் சரணம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சாய் சரணம் பாபா சரணம் சரணம் – சாய் பாபா பாடல் தமிழ் வரிகள். ஷிர்டி சாய்பாபா பாடல்கள். Sai Saranam Baba Saranam Saranam sai baba song by Yesudas – Shirdi Sai baba Devotional Songs Tamil Lyrics.

ஜெய் பாண்டுரங்கா ஜெய் பண்டரி நாதா சரணம்

சரணம் சரணம்

============

சாயி சரணம் பாபா சரணம் சரணம்

சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்

இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி

நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி

இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி

நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

கல்வி செல்வதை வேண்டிய பிள்ளைக்கு

கற்று தந்தான் கணபதியாக

பிள்ளை செல்வதை நாடி வந்தோருக்கு

பேரருள் புரிந்தான் ஈஸ்வரனாக

திருவை நீக்கும் உமி போல் நோயை

தீர்த்திட வந்தான் திருமாளாக

பக்தர்கள் பலருக்கு மாறுதியாக

மற்றும் சிலருக்கு தத்தாத்திரேயராய்

அவரவர்கள் ஆசைப்படி தரிசனம் தந்தானே

தஞ்சமும் அளித்தான்

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

பெரும் புயலை தாக்குதலால் அமைதியற்ற எளியோரை

ஆதரித்து காக்கும் தெய்வம் ஆகினான்

அஞ்ஞானம் கண் குருடு அத்தனையும் தீரும் வண்ணம்

அரவணைத்து ஆதரித்த வைத்தியன்

வீடு தோறும் பிட்சை பெற்று அவர்கள் செய்த பாவம் எல்லாம்

பெற்றுக்கொண்டு மோட்சம் தந்த புண்ணியன்

பற்றிக்கொண்ட பாவம் எல்லாம் விட்டு விட்டு ஓடிப்போக

சக்தி தன்னை தவத்தினாலே பெற்றவன்

அஷ்ட சித்தி சாதனையால் அங்கமெல்லாம் துண்டமாக

ஆத்ம சக்தி காட்டினானே சித்தனாய்

ஜீவா ராசி அத்தனைக்கும் சாயி சரணம் சாயி சரணம்

திவ்ய ஞான சாதனைக்கு சாயி சரணம் சாயி சரணம்

ஆத்திகர்க்கு சாயி சரணம் நாத்திகர்க்கும் சாயி சரணம்

ஆத்திகர்க்கு சாயி சரணம் நாத்திகர்க்கும் சாயி சரணம்

பக்திக்கும் சாயி சரணம் முக்திக்கு சாயி சரணம்

பக்திக்கும் சாயி சரணம் முக்திக்கு சாயி சரணம்

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

இந்த சாய் சரணம் பாபா சரணம் சரணம் | sai saranam baba saranam saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், சாய் பாபா பாடல்கள், Sai Baba Songs சாய் சரணம் பாபா சரணம் சரணம் சாய் சரணம் பாபா சரணம் சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments