Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சென்று வா நீ ராதே இந்தப் போதே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சென்று வா நீ ராதே இந்தப் போதே – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Sendru Vaa Nee Radhe Intha-podhe ini sindhanai seythida neramillaiyadi – Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics

============

பல்லவி (கல்யாணி)

சென்று வா நீ ராதே இந்தப் போதே

இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி

அனுபல்லவி (கல்யாணி)

கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே

அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே

சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி

நேரில் வர ஒரு தோதுமில்லையடி

சரணம்1 (காம்போஜி)

சொன்னாலும் புரியாதே -உனக்கு

தன்னாலும் தோன்றாதே

அந்த மன்னனை நம்பாதே

அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே

சரணம்2 (வசந்தா)

உலகை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு

பொய் மூட்டி அளப்பதும் பாரமா

கண்ணன் நலம் வந்து ஆயிரம் சொன்னாலும்

நாம் அதை நம்பிவிடல் ஞாயமா

ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்

கொள்வதெல்லாம் (alt: சொல்வதெல்லாம்) உண்மையாகுமா

நம் தலத்தருகே இன்று தனித்து வர என்றால்

தவப்பயன் ஆகுமே வினைப்பயன் போகுமே

இந்த சென்று வா நீ ராதே இந்தப் போதே | sendru vaa nee radhe பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs சென்று வா நீ ராதே இந்தப் போதே சென்று வா நீ ராதே இந்தப் போதே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment