Utra thunai unaiyandri lyrics tamil

உற்றதுணை உன்னையன்றி பாடல் வரிகள் (Utra thunai unaiyandri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… உற்றதுணை உன்னையன்றி – கோவை ஜெயராமன் பாகவதர்

விருத்தம்
இனிமேலும் உண்மை துதிப்பது அல்லாது வேறு இஷ்ட குலதெய்வம் உண்டோ
எவ்வேலை உன் கிருபை கிடைக்கும் என்றே
காத்திருக்கும் என் கிருதய சாதகத்தை தனது குஞ்ஜென்பதும் அறிந்து
கருணாமிருதமும் தந்து பாலிப்பதற்கு நீர் தாமதித்தால்
இச்சிசு சகிக்குமோ
உமது செயல் நானும் அறியாததும் உண்டோ
மனதினில் வெறுப்போ
தென்மதுரையில் அதிகாரமான நின் பெருமைதானோ
ஜன சமூக மகா மேரு சங்கரந்தாம்புரியில் சிந்தை பூரித்து வாழும் என் அந்தரங்க தெய்வமே
மன மோகன ரூபனே
மன மோகன ரூபனே திருமால்கரன் பெற்ற செல்வகுமாரனிதி
ஜெய வீரமணிகண்டனே
ஜெய வீரமணிகண்டனே

உற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு
பெற்றவன் நீ எனை காக்க வருவாயப்பா
எனக்குற்ற துணை உனையன்றி வேறு யாருண்டு

அறியாமல் நான் செய்த பிழையாவுமே
பெரிதாக கருதாத கருணை தெய்வமே
*(எனக்குற்ற துணை)*

ஆனந்தமாய் சரணகீதம் பாடுவேன்
அழகாக நீ அதற்கு தலையாட்டுவாய்

எருமேலி பேட்டை துள்ளி ஆட்டம் ஆடுவேன்
எனை ஆட்டுவிக்கும் நீ அதற்கு தாளம் போடுவாய்

இருமுடி தலைதாங்கி மலை ஏறுவேன்
வழிகாட்டும் குலவிளக்காய் கூட வருவாய்

ஐயா ஐயா என்று அழுவேனே நான்…..
ஐயா ஐயப்பா என்று அழுவேனே நான்….

கண்களில் நீர் துடைத்து கரை ( மலை ) ஏற்றுவாய்
என் கண்களில் நீர் துடைத்து கரையேற்றுவாய்

எனக்குற்ற துணை உனையன்றி வேறு யார் உண்டு
பெற்றவன் நீ எனைக்காக்க வருவாயப்பா

வேறு யாருண்டு…
வேறு யாருண்டு…
வேறு யாருண்டு…

2 Comments

Leave a Comment