Pachai Mamalai lyrics Tamil

பச்சைமா மலைபோல் மேனி பாடல் வரிகள்

*தொண்டரடிப்பொடி ஆழ்வார்*

*TM சௌந்தரராஜன்*

👇👇👇

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை

பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!

காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்

ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே!

🟣🟣🟣🟣🟣

🌺 தென்மொழியாம் தமிழ் மொழியில் *வைணவ இலக்கியங்களை* வளர்த்தவர்கள் பரம்பரையில், *நாலாயிர திவ்வியப் பிரபந்தம்* (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிரன்டு பேர்.

அவர்களிலே பத்தாவதாக வரிசைப் படுத்தப்பட்டவர் *ஸ்ரீரங்கம் ரங்கநாதரை* மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர் *தொண்டரடிப்பொடி ஆழ்வார்* ஆவார்.

இவரது இயற்பெயர் *“விப்ர நாராயணர்”*. சோழ நாட்டில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் *‘திருமால் வனமாலை*’யின் அம்சமாக அவதரித்தார்.

திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவருக்கும் குடும்பம் அமைத்து தர எண்ணிய, அரங்கன் மாயங்கள் செய்து தேவதேவி என்ற ஒரு பெண்ணிடம் மயங்கச் செய்தான்.

அரங்கனை முற்றிலும் மறந்து தன் பொருளை அந்தப் பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அந்தப் பெண்ணின் தாயாரின் சூழ்ச்சியால் ஆழ்வாரைக் கை விட்டாள்.

ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான்.

உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான்.

அந்தப் பெண்ணின் தாயாரும் மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள்.

மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.

அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு தேவதேவியுடன் வாழ்ந்தாலும் பழையபடி இறைத்தொண்டில் ஈடுபட்டார். திருமாலை போற்றி பாடல்கள் பல எழுதினார்.

🟣🟣🟣🟣🟣

🌺 இதையெல்லாம் அழகான திரைக்கதையாக்கி *”திரையிறைச்செல்வர்,” “தெய்வீக இயக்குனர்”* என போற்றப்பட்ட *ஏ.பி.நாகராஜன்* அவர்கள் தனது ஒன்பதாவது படமாக 1968’ல் இயக்கி வெளிவந்த *திருமால் பெருமை* என்ற பக்தி படத்தில் *சிவாஜி*’யும் *பத்மினி*’யும் விப்ர நாயாயனராகவும் தேவதேவியாகவும் சிறப்பாய் நடித்திருந்த படத்தின் பிற்பகுதி கதையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடலுடன் திருமாலின் பெருமையை உணர்த்தும் மூன்று முத்தான பாக்களை *கவிஞர் கண்ணதாசன்* தன் அழகிய வார்த்தைகளை பாமாலையாக தொடுக்க அதை நம் உள்ளங்களில் மறவாமல் இருக்கும் படி தன் இன்னிசையால் மேலும் சுவையாக்கி கொடுத்தவர் *”திரையிசைத்லகம்” கே.வி.மகாதேவன்* அவர்கள்…

1 Comment

Leave a Comment