Engalukkum kuraiyum undu lyrics in tamil
எங்களுக்கும் குறையும் உண்டு
—————————————
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா…….
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா….(இசை)
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா…2
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ……தாயே நிம்மதியும் தேவையில்லையா..2
(எங்களுக்கு)
ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை………………….(இசை)….2
சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…….2
நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்….மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
(எங்களுக்கு)
வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே….(இசை)…………2
முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…..2
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…..தில்லை காளியே
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ……தாயே நிம்மதியும் தேவையில்லையா..
(எங்களுக்கு)