Kasi nathanai vananginan song lyrics tamil
காசிநாதனை வணங்கினேனில்லை பாடல் வரிகள் (Kasi nathanai song lyrics tamil)
காசிநாதனை வணங்கினேனில்லை
கைலாசம் தான் போகினேன் நானில்லை
விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால்
விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன்
காசிநாதனை வணங்கினேனில்லை
கைலாசம் தான் போகினேன் நானில்லை
குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும்
ஆரியங்காவில் நவயோவனத்தோடும்
அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும்
ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன்
என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய்
உன்னைக் காண சபரிமலை வந்தேன்
உன்னைக் காண சபரிமலை வந்தேன்
காசிநாதனை வணங்கினேனில்லை
கைலாசம் தான் போகினேன் நானில்லை
வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும்
பம்பாதீரத்தில் மூலகணபதியையும் *(2)*
பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும்
வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன்
என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி நான் வந்தேன்
காணவே சன்னிதி நான் வந்தேன்
காசிநாதனை வணங்கினேனில்லை
கைலாசம் தான் போகினேன் நானில்லை