வண்டரங்கப் புனற்கமல பாடல் வரிகள் (vantarankap punarkamala) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் LYRICS தலம் தலம் : நாட்டில் திருமுறை : அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் :
திருமுறை :
நாடு :
தலம் :
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி
வண்டரங்கப் புனற்கமல
வண்டரங்கப் புனற்கமல
மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடும்
அளியரசே ஒளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர்
திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்நிலைமை
பரிந்தொருகாற் பகராயே. 1
எறிசுறவங் கழிக்கானல்
இளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவும்
அருவினையேன்1 பயனன்றே
செறிசிறார் பதம்ஓதுந்
திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார்2 மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாயே.
பாடம் : 1 அருவினையின் 2வெறிநீறார் 2
பண்பழனக் கோட்டகத்து
வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே
கடுவினையேன் உறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தால்
பழியாமோ மொழியாயே. 3
காண்டகைய செங்கா லொண்
கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து
பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத்
திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென்
றடியறிய உணர்த்தாயே. 4
பாராரே யெனையொருகால்
தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற்
கபோ தகங்காள்
தேராரும் நெடுவீதித்
திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக்
கென்நிலைமை நிகழ்த்தீரே. 5
சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள்
விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி
புரத்தீசன் துளங்காத
கூற்றுதைத்த திருவடியே
கூடுமா கூறீரே. 6
முன்றில்வாய் மடல்பெண்ணைக்
குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோய்
அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந்
திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென்
கூர்பயலை கூறீரே. 7
பானாறு மலர்ச்சூதப்
பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கும் இனிதாக
மொழியும்எழில் இளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடத்தே3
வரவொருகாற் கூவாயே.
பாடம் : 3 என்னிடைக்கே 8
நற்பதங்கள் மிகஅறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற்
பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர்
திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென்
மெய்ப்பயலை விளம்பாயே. 9
சிறையாரும் மடக்கிளியே
இங்கேவாதே னொடுபால்
முறையாலே உணத்தருவன்
மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடல்றோணி
புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம்
எனக்கொருகாற் பேசாயே. 10
போர்மிகுத்த வயல்தோணி
புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத்
திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன்
சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார்
சிவலோகஞ் சேர்வாரே.
01.006 அங்கமும் வேதமும்அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 1
நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 2
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 3
நாமரு கேள்வியர் வேள்வியோவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 4
பாடல் முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மே1யிடமாக ஆடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.பாடம் : 1 காடயலே 5
புனையழ லோம்புகை அந்தணாளர்
பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறையோர் பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 8
அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே. 9
இலைமரு தேயழ காகநாளு
மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் தேரரை நீங்கிநின்று2
நீதரல் லார்தொழு மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாயருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.பாடம் : 2 நீங்கிநின்ற,நீங்கநின்ற 10
நாலுங்குலைக்கமு கோங்குகாழி
ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும்
மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
சொல்லவல் லார்வினை யில்லையாமே.சுவாமி : உத்தராபதீஸ்வரர்; அம்பாள் : சூளிகாம்பாள். 11