தோற்றினான் எயிறு பாடல் வரிகள் (torrinan eyiru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அவளிவணல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அவளிவணல்லூர்
சுவாமி : சாட்சிநாயகேசுவரர்
அம்பாள் : சவுந்தரநாயகியம்மை

தோற்றினான் எயிறு

தோற்றினான் எயிறு கவ்வித்
தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே. 1

வெம்பினா ரரக்க ரெல்லாம்
மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 2

கீழ்ப்படக் கருத லாமோ
கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
அவளிவ ணல்லூ ராரே. 3

நிலைவலம் வல்ல னல்லன்
நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்
தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
அவளிவ ணல்லூ ராரே. 4

தவ்வலி யொன்ற னாகித்
தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்
சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே. 5

நன்மைதான் அறிய மாட்டான்
நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று
வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்
கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்
அவளிவ ணல்லூ ராரே. 6

கதம்படப் போது வார்கள்
போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 7

நாடுமிக் குழிதர் கின்ற
நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி
ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று
பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்
அவளிவ ணல்லூ ராரே. 8

ஏனமா யிடந்த மாலும்
எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி
நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
அவளிவ ணல்லூ ராரே. 9

ஊக்கினான் மலையை யோடி
உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை
நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
அவளிவ ணல்லூ ராரே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment