பொன்நேர் தருமே பாடல் வரிகள் (ponner tarume) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாகேச்சுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநாகேச்சுரம்
சுவாமி : செண்பகாரணியேசுவரர்
அம்பாள் : குன்றமுலைநாயகியம்மை

பொன்நேர் தருமே

பொன்நேர் தருமே
னியனே புரியும்
மின்நேர் சடையாய்
விரைகா விரியின்
நன்னீர் வயல்நா
கேச்சர நகரின்
மன்னே யெனவல்
வினைமாய்ந் தறுமே. 1

சிறவார் புரமூன்
றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த்
தவனே உயரும்
நறவார் பொழில்நா
கேச்சர நகருள்
அறவா எனவல்
வினையா சறுமே. 2

கல்லால் நிழல்மே
யவனே கரும்பின்
வில்லான் எழில்வே
வவிழித் தவனே
நல்லார் தொழுநா
கேச்சர நகரில்
செல்வா எனவல்
வினைதேய்ந் தறுமே. 3

நகுவான் மதியோ
டரவும் புனலும்
தகுவார் சடையின்
முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா
கேச்சர நகருள்
பகவா எனவல்
வினைபற் றறுமே. 4

கலைமான் மறியுங்
கனலும் மழுவும்
நிலையா கியகை
யினனே நிகழும்
நலமா கியநா
கேச்சர நகருள்
தலைவா எனவல்
வினைதான் அறுமே. 5

குரையார் கழலா
டநடங் குலவி
வரையான் மகள்கா
ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே
றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங்
கும்அருந் துயரே. 6

முடையார் தருவெண்
டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண்
டுழல்கா ரணனே
நடையார் தருநா
கேச்சர நகருள்
சடையா எனவல்
வினைதான் அறுமே. 7

ஓயா தஅரக்
கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய்
துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத்
துவர்நா கேச்சரத்
தாயே எனவல்
வினைதான் அறுமே. 8

நெடியா னொடுநான்
முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய்
நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா
கேச்சர நகரே
இடமா வுறைவா
யெனஇன் புறுமே. 9

மலம்பா வியகை
யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட்
டுரைவிட் டுலகில்
நீலம்பா வியநா
கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ
வினைதேய்ந் தறுமே. 10

கலமார் கடல்சூழ்
தருகா ழியர்கோன்
தலமார் தருசெந்
தமிழின் விரகன்
நலமார் தருநா
கேச்சரத் தரனைச்
சொலமா லைகள்சொல்
லநிலா வினையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment