Tuesday, February 17, 2026
HomeSivan Songsநிலவும் புனலும் பாடல் வரிகள் | nilavum punalum Thevaram song lyrics in tamil

நிலவும் புனலும் பாடல் வரிகள் | nilavum punalum Thevaram song lyrics in tamil

நிலவும் புனலும் பாடல் வரிகள் (nilavum punalum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேணுபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவேணுபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

நிலவும் புனலும்

நிலவும் புனலும்
நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க்
கிடமாம் எழிலார்
உலவும் வயலுக்
கொளியார் முத்தம்
விலகுங் கடலார்
வேணு புரமே. 1

அரவார் கரவன்
அமையார் திரள்தோள்
குரவார் குழலா
ளொருகூ றனிடங்
கரவா தகொடைக்
கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார்
வேணு புரமே. 2

ஆகம் மழகா
யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த்
தவன்நண் ணுமிடம்
போகந் தருசீர்
வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும்
வேணு புரமே. 3

காசக் கடலில்
விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா
வதுஇன் நறவ
வாசக் கமலத்
தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும்
வேணு புரமே. 4

அரையார் கலைசேர்
அனம்மென் னடையை
உரையா வுகந்தா
னுறையும் இடமாம்
நிரையார் கமுகின்
நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ்
வேணு புரமே. 5

ஒளிரும் பிறையும்
முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே
லுடையா ளிடமாம்
நளிருங் புனலின்
நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ்
வேணு புரமே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

ஏவும் படைவேந்
தன்இரா வணனை
ஆவென் றலற
அடர்த்தா னிடமாம்
தாவும் மறிமா
னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ்
வேணு புரமே. 8

கண்ணன் கடிமா
மலரில் திகழும்
அண்ணல் இருவர்
அறியா இறையூர்
வண்ணச் சுதைமா
ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும்
வேணு புரமே. 9

போகம் மறியார்
துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா
அடியார் இறையூர்
மூகம் மறிவார்
கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார்
வேணு புரமே. 10

கலமார் கடல்போல்
வளமார் தருநற்
புலமார் தருவே
ணுபுரத் திறையை
நலமார் தருஞா
னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ
றுவர்கூர் மையரே.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments