நன்று நாடொறும் பாடல் வரிகள் (nanru natorum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேட்களம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவேட்களம்
சுவாமி : பாசுபதேசுவரர்
அம்பாள் : நல்லநாயகி

நன்று நாடொறும்

நன்று நாடொறும்
நம்வினை போயறும்
என்று மின்பந்
தழைக்க இருக்கலாஞ்
சென்று நீர்திரு
வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை
யானைத் தொழுமினே. 1

கருப்பு வெஞ்சிலைக்
காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை
யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய
வேட்களங் கைதொழு
திருப்ப னாகில்
எனக்கிட ரில்லையே. 2

வேட்க ளத்துறை
வேதியன் எம்மிறை
ஆக்க ளேறுவர்
ஆனைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன்
பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக்
கறைமிடற் றண்ணலே. 3

அல்ல லில்லை
அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை
சூடு மணாளனார்
செல்வ னார்திரு
வேட்களங் கைதொழ
வல்ல ராகில்
வழியது காண்மினே. 4

துன்ப மில்லைத்
துயரில்லை யாமினி
நம்ப னாகிய
நன்மணி கண்டனார்
என்பொ னாருறை
வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி
யேத்தி யிருப்பதே. 5

கட்டப் பட்டுக்
கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர்
போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு
வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை
யாயின பாறுமே. 6

வட்ட மென்முலை
யாளுமை பங்கனார்
எட்டு மொன்றும்
இரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு
வேட்களங் கைதொழு
திட்ட மாகி
யிருமட நெஞ்சமே. 7

நட்ட மாடிய
நம்பனை நாடொறும்
இட்டத் தாலினி
தாக நினைமினோ
வட்ட வார்முலை
யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு
வேட்களந் தன்னையே. 8

வட்ட மாமதில்
மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய
ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை
தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் பொற்றிரு
வேட்களச் செல்வரே. 9

சேட னாருறை
யுஞ்செழு மாமலை
ஓடி யாங்கெடுத்
தான்முடி பத்திற
வாட வூன்றி
மலரடி வாங்கிய
வேட னாருறை
வேட்களஞ் சேர்மினே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment