மனைவிதாய் தந்தை பாடல் வரிகள் (manaivitay tantai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்
சுவாமி : காயாரோகணேசுவரர்
அம்பாள் : நீலாயதாட்சியம்மை

மனைவிதாய் தந்தை

மனைவிதாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி
வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்
உய்யலாம் நெஞ்சி னீரே. 1

வையனை வைய முண்ட
மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்
திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 2

நிருத்தனை நிமலன் றன்னை
நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை
விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்
உய்ந்தவா நெஞ்சி னீரே. 3

மண்டனை இரந்து கொண்ட
மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த
தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே
அம்மநாம் உய்ந்த வாறே. 4

நிறைபுனல் அணிந்த சென்னி
நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்
மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்
காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த
இடும்பைபோய் இன்ப மாமே. 5

வெம்பனைக் கருங்கை யானை
வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த
காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை
நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே
திண்ணம்நாம் உய்ந்த வாறே. 6

வெங்கடுங் கானத் தேழை
தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்
கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா
மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்
பெற்றுநாங் களித்த வாறே. 7

தெற்றினர் புரங்கள் மூன்றுந்
தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்
காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்
பிறந்தவர் பிறந்தி லாரே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

கருமலி கடல்சூழ் நாகைக்
காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா
தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ
டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்
திண்ணம்நாம் உய்ந்த வாறே

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment