கோனைக் காவிக் பாடல் வரிகள் (konaik kavik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவானைக்கா – திருவானைக்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவானைக்கா – திருவானைக்கோவில்
சுவாமி : ஜம்புகேசுவரர்
அம்பாள் : அகிலாண்டநாயகி

கோனைக் காவிக்

கோனைக் காவிக்
குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண்
ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலெம்
மானை அணைகிலார்
ஊனைக் காவி
யுழிதர்வர் ஊமரே. 1

திருகு சிந்தையைத்
தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப்
பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க்
கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும்
ஆனைக்கா அண்ணலே. 2

துன்ப மின்றித்
துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டில்
இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன்
இறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும்
ஆனைக்கா அண்ணலே. 3

நாவால் நன்று
நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி
யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங்
கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும்
ஆனைக்கா அண்ணலே. 4

வஞ்ச மின்றி
வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி
விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின்
றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும்
ஆனைக்கா அண்ணலே. 5

நடையை மெய்யென்று
நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும்
பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே
தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும்
ஆனைக்கா அண்ணலே. 6

ஒழுகு மாடத்துள்
ஒன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன்
முன்னங் கழலடி
தொழுது கைகளாற்
றூமலர் தூவிநின்
றழும வர்க்கன்பன்
ஆனைக்கா அண்ணலே. 7

உருளும் போதறி
வொண்ணா உலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத்
தீவினை சேராதே
இருள றுத்துநின்
றீசனென் பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும்
ஆனைக்கா அண்ணலே. 8

நேச மாகி
நினைமட நெஞ்சமே
நாச மாய
குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப்
பராபர ஆனந்த
ஆசை யுற்றிடும்
ஆனைக்கா அண்ணலே. 9

ஓத மாகடல்
சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம்
பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப்
பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும்
ஆனைக்கா அண்ணலே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment