கனகமா வயிர பாடல் வரிகள் (kanakama vayira) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நொடித்தான்மலை – திருக்கயிலாயம் தலம் வடநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : வடநாடு
தலம் : நொடித்தான்மலை – திருக்கயிலாயம்
சுவாமி : கைலாயநாதர்
அம்பாள் : கைலாயநாயகி

கனகமா வயிர

கனகமா வயிர முந்து
மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி
யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச
னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 1

கதித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்
அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட
நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 2

கறுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 3

கடுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச
இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற
நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 4

கன்றித்தன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா
லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத
னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 5

களித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்
நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட
வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 6

கருத்தனாய்க் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே
ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்
திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 7

கடியவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச
எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா
லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 8

கரியத்தான் கண்சி வந்து
கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்
ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்
நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. 9

கற்றனன் கயிலை தன்னைக்
காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே
சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்
உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே.

இத்தலம் வடநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment