Bilvashtakam Tamil version இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வில்வாஷ்டகம் | பில்வாஷ்டகம் தமிழில் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மூன்று தளம் மூன்று குணம்

மூன்று விழி மூவாயுதம்

மூலமென கோலம் தரும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

முப்பிறவி துயர் நீக்கும்

முப்பிரிவாய் விளங்கிடுமே

புனிதமெல்லாம் அள்ளித்தரும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

கோடி கோடி கல்யாணம்

செய்து வைக்கும் இனிய பலன்

குறைகளின்றி தந்திடுமே

ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால்

கால பைரவ தரிசனத்தால்

வரும் பலனைத் தந்தருளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

பூச்சிகளால் வீணாகா

அதிசயமாம் வில்வதளம்

மங்களமே தினமருளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

திங்கள் எனும் இந்துவாரம்

விரதமுடன் பூஜை செய்ய

ஏற்ற தளம் வில்வதளம்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வாஜபேயம் சோமயாகம்

வளர்க்கின்ற யாக பலன்

அத்தனையும் தந்தருளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம

கயைப்பிரயாகை யாத்திரையை

செய்வதனால் வரும் பலனை

தந்திடுமே வில்வதளம்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

சாளக்கிராமம் வணங்கும் பலன் ,

சான்றோரை வணங்கும் பலன்

தந்தருளும் எந்நாளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

கோடி ஆனை தான பலன்

அஸ்வமேத யாக பலன்

ஆயிரமாய்த் தந்தருளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

காண்பதுவும் புண்ணியமே

தொடுவதும் புண்ணியமே

கனிவருளும் நெஞ்சினிலே

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

பாடசாலை ஆலயங்கள்

பல ஆயிரம் அமைப்பதனால்

வருகின்ற பலன் அருளும்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

அன்னதானம் பல ஆயிரமாய்

செய்கின்ற ஜென்ம பலன்

அளித்திடுமே ஓர் அர்ச்சினையில்

ஓர் வில்வம் சிவார்ப்பணம்

வில்வாஸ்ட்டகம் தன்னை

சிவனருகில் உரைப்போர்க்கு

செல்வமெல்லாம் கூடிவரும்,

சிவனருளும் கைகூடும்.

============

வில்வாஷ்டகம் சிறப்பு | Significance of Bilvashtakam

சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள். பிரதோஷம், மாசிச் செவ்வாயில், மாசி மாதப் பிறப்பில், மாசிப் பிரதோஷ நாளில், மகா சிவராத்திரி வேளையில், வில்வாஷ்டகம் படியுங்கள். சிவராத்திரி இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்து, சிவனை மனதில் தியானித்து வழிபடுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்வார்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தேகத்திலும் உள்ளத்திலும் ஆரோக்கியமும் தெளிவும் குடிகொள்ளும். துஷ்ட‌ சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் சிவனார்!

இந்த | bilvashtakam tamil version பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், Stotram, Ashtakam வில்வாஷ்டகம் | பில்வாஷ்டகம் தமிழில் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment