Title : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் – கந்தன் கருணை திரைப்பட‌ முருகன் பாடல் வரிகள்.Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kandhan Karunai fim song lyrics – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச் செந்தூரிலே வேலாடும்

திருப்புகழ் பாடியே கடலாடும்!

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருச் செந்தூரிலே வேலாடும்

திருப்புகழ் பாடியே கடலாடும்!

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன்

சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு

உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)

இந்த திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா | thiruparankundrathil nee sirithal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment