Shiva Siddeshwara Ashtakam in Tamil | Sri Siddheshwarashtakam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவ சித்தேஸ்வர அஷ்டகம் | சிவ ஸித்தேச்வர அஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
மஹா தீர்த்த ராஜஸ்ய தீரே விபாந்தகம்
மஹாபூ திரூபம் மஹாத்மைக வேத்யம்
மஹா ஸித்திபூரா ப்ரதானை கதக்ஷம்
பஜாமைவ ஸித்தேச்வரம் சித்த: சம்பும்!
மஹா தீர்த்தக் கரையில் விளங்குபவரும், சிறந்த விபூதி (ஐஸ்வர்யம்) வடிவானவரும், மஹாத்மாக்களால் மட்டும் அறியப்படுபவரும், பெரிய பெரிய சித்திகளைக் கொடுப்பதில் சமர்த்தரும், எல்லோருக்கும் நன்மையைத் தருபவருமான ஸித்தேச்வரரை மனமே நீ எப்பொழுதும் நினைப்பாயாக!
மனோஜஸ் வதக்ஷ்யக்னி பஸ்மாவசேஷ:
மதாந்தச்ச தக்ஸோ கதச்சோச்ய பாவம்
மனோஜாச்ச தக்ஷக்னி தாந்தோ மதாந்தோ
பஜே நிர்மதத்வாய ஸித்தேச்வரம் த்வாம்!
உன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பல் ஆனான். மிகவும் மதம் பிடித்திருந்த தட்சப்பிரஜாபதி வருந்தத்தக்க நிலையை அடைந்தான். எரிந்துபோன மன்மதனாலே பாமர ஜனங்களும் தவித்து மதம் பிடித்தலைகிறார்கள். ஆகையால் எனக்கு மதம் சற்றும் இல்லாமல் இருப்பதற்காக ஸித்தேச்வரரை பூஜிக்கின்றேன்!
இயம் சாஸ்பி கங்கா நிபத்தா கபர்த்தே
மதாட்யா யதஸ்ஸா கணக்ஸீர கல்பம்
விஸ்ருஷ்டா ஜெகத் பாபநாசாய யேன
ஸ்வயம் சித்த ஸித்தேச்வரம் சிந்தயைனம்!
மதம் பிடித்த கங்கையானவள் உமது ஜடாமுடியில் நீர்த் துளிக்கு ஒப்பாக கட்டுப்பட்டு நிறுத்தப்பட்டாள். ஜெகத்தின் பாபங்களை போக்குவதற்காக எவரால் விடுவிக்கப்பட்டாளோ அப்பேர்பட்ட ஸித்தேச்வரரை ஹே மனமே நீ சிந்தை செய்!
ந தேஸ்ந்தோ சாதிர் ஹரி:ஸ்ஸோஸ்பி தாதா
வராஹோ பவன் னூர்த்வ ஹம்ஸீ பவம்ஸ்ச
ததா தேஹி ஸாக்ஷ்யம் பஜே பாந்தமேவ
மஹா லிங்க ரூபேண ஸித்தேச்வரம் த்வாம்!
விஸ்ணு வராஹமாய் உனது அடியைக் காணவும், பிரம்மாவானவர் அன்னமாகி உமது முடியைக் காண்பதற்கும் இயலாமல் சாட்சி தன்மையை அடைகிறார்கள். அப்பேர்பட்ட ஜோதியாய் விளங்கும் மஹாலிங்கரூபனை அந்த ஸித்தேச்வரரை சேவிக்கின்றேன்.
சிவோஸ்யம் ப்ரதேசோ மஹான் மத்யதேச:
சிவா ஜாஹ்னவீ நித்ய ஸித்த ப்ரவாஹா
சிவ ஸ்த்வம் சிவம் நித்ய ஸித்தம் ததான:
சிவோ நஸ்ஸதா தேவ! ஸித்தேச்வர ஸ்யா!
இந்த மத்ய பிரதேசம் மிகவும் மங்களமானது. இங்கு நித்தியம் கங்கை பிரவாஹமாக மங்கள ரூபமாக பிரவஹிக்கின்றாள். எப்பொழுதும் நம்மிடமுள்ளதான சிவத்தன்மையைக் கொடுப்பவராக எங்களுக்கு மங்களம் அளிப்பவராக ஸித்தேச்வரராக நீங்கள் விளங்க வேண்டும்.
பதாப்ஜே த்வதீயே ஸ்வ கீயாக்ஸி பத்மம்
புரா பூஷண த்வேன நாராயணோ த்தாத்
இதீதம் புராவ் ருத்தமத் த்யாத்ர ஸத்யம்
பதர்யோ ஹரிஸ்ஸாது ஸித்தேச்வரா அகாத்!
உன்னுடைய பாதபதமத்தில் முன்பொரு சமயம் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய தாமரைக் கண்ணை அர்ப்பணித்தார். என்ற பழைய செய்தி இங்கு உண்மையாகின்றது. (பதரியில் உள்ள ஹரியானவர் ஸித்தேச்வரருக்கு தமது நயனங்களுள் ஒன்றை புஷ்பமாக அளித்தார்).
கபர்தாத் த்வதீயாத் விஸ் ருஷ்டாபி கங்கா
புன:ஸேவிதும் த்வா மஹோ பத்த வாஞ்சா!
ஸ்காசே த்வ தீயேதி பாரப்ர வாஹா
நிஜாம் போஸ் பிஷேகாய ஸித்தேச்வராகாத்!
உம்முடைய ஜடையில் இருந்து விடுவிக்கப்பட்ட கங்கயானவள் மறுபடியும் உம்மை சேவிப்பதற்கு ஆசையுள்ளவளாக மிகுந்த பிரவாஹத்துடன் உமக்கு அபிஷேகம் செய்வதற்காக ஸித்தேச்வரரே உம்மிடம் வந்தாள்.
ந மத்தோஸ் ம்யஹம் சேன் நமத்தோஸி பின்ன:
நமத்தோஸி தஸ்த்வம் நமத் தோஷ தாதா!
ந மத்தேஸ்ஸி பின்ன ஸ்த்வ மித்யைக்ய தோஷம்
நமத்ப்ய: ப்ரதேஹீஹ சித்தேச்வர த்வம்!
நான் மதம் பிடிக்தவனாக இருப்பினும் நீர் என்னைத்தவிர வேறல்லவே! வணங்குபவர்களால் சந்தோஷப்படுத்தப்படும் நீர் உம்மை வணங்குபவர்க்கும் சந்தோஷத்தை அளிக்கிறீர். ‘என்னைத் தவிர நீ வேறில்லை ஒன்றுதான் என்ற மகிழ்ச்சியை/ சந்தோஷத்தை ஸித்தேச்வரரே நீர் வணங்குபவர்களுக்கு கொடுக்கிறீர்கள்.
இதி ப்ரயாக சித்தேச்வர பக்திப் ருஜ் ஜனதா ஹ்ருதி
ச்லோ காஷ்டகம் மிதம் நித்யம் வர்த்தய தாம் சுபம்!
இப்படியாக ப்ரயாக ஸித்தேச்வரரிடம் பக்தியுள்ள மக்களின் உள்ளங்களில் இந்த அஷ்டக ஸ்லோகம் நித்தியம் சந்தோஷத்தை வளர்க்கட்டும்! சுபம்!
இந்த | shiva siddeshwara ashtakam tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், Stotram, Ashtakam சிவ சித்தேஸ்வர அஷ்டகம் | சிவ ஸித்தேச்வர அஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…