Thursday, November 13, 2025
HomeMurugar SongsOm Shanmuga pathaye Lyrics in Tamil | ஓம் ஷண்முக பதயே பாடல் வரிகள்

Om Shanmuga pathaye Lyrics in Tamil | ஓம் ஷண்முக பதயே பாடல் வரிகள்

Om Shanmuga pathaye Lyrics in Tamil

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாடல் வரிகள் (Om Shanmuga Pathaye) மற்றும் பாடலின் ஒவ்வொரு வரிகளின் பொருள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.. ! Om shanmuga pathaye Lyrics in Tamil with meaning

1. ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:
7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:
13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
15. ஓம் இகபர பதயே நமோ நமஹ:
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:
17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:
18. ஓம் நயநய பதயே நமோ நமஹ:
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:

21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:
22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:
26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
27. ஓம் அபேத பதயே நமோ நமஹ:
28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
30. ஓம் மயூர பதயே நமோ நமஹ:

31. ஓம் பூத பதயே நமோ நமஹ:
32. ஓம் வேத பதயே நமோ நமஹ:
33. ஓம் புராண பதயே நமோ நமஹ:
34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:
35. ஓம் பக்த பதயே நமோ நமஹ:
36. ஓம் முக்த பதயே நமோ நமஹ:
37. ஓம் அகார பதயே நமோ நமஹ:
38. ஓம் உகார பதயே நமோ நமஹ:
39. ஓம் மகார பதயே நமோ நமஹ:
40. ஓம் விகாச பதயே நமோ நமஹ:
41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
42. ஓம் பூதி பதயே நமோ நமஹ:
43. ஓம் அமார பதயே நமோ நமஹ:
44. ஓம் குமார பதயே நமோ நமஹ:.

ஸ்ரீ குமாரஸ்தவம் முற்றிற்று.

குமாரஸ்தவம் பாடல் பொருள்:

ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்
ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments