வட்ட னைம்மதி சூடியை பாடல் வரிகள் (vatta naim mati cutiyai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவண்ணாமலை தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : நடுநாடு
தலம் : திருவண்ணாமலை
சுவாமி : அண்ணாமலை நாதர்
வட்ட னைம்மதி சூடியை
வட்ட னைம்மதி
சூடியை வானவர்
சிட்ட னைத்திரு
வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந்
தார்புர மூன்றையும்
அட்ட னையடி
யேன்மறந் துய்வனோ. 1
வான னைம்மதி
சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு
வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந்
தார்புர மூன்றெய்த
ஆன னையடி
யேன்மறந் துய்வனோ. 2
மத்த னைம்மத
யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு
வண்ணா மலையனை
முத்த னைமுனிந்
தார்புர மூன்றெய்த
அத்த னையடி
யேன்மறந் துய்வனோ. 3
காற்ற னைக்கலக்
கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு
வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி
யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி
யேன்மறந் துய்வனோ. 4
மின்ன னைவினை
தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு
வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந்
தார்புர மூன்றெய்த
அன்ன னையடி
யேன்மறந் துய்வனோ. 5
மன்ற னைம்மதி
யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு
வண்ணா மலையனை
வென்ற னைவெகுண்
டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி
யேன்மறந் துய்வனோ. 6
வீர னைவிட
முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு
வண்ணா மலையனை
ஊர னையுண
ரார்புர மூன்றெய்த
ஆர னையடி
யேன்மறந் துய்வனோ. 7
கருவி னைக்கடல்
வாய்விட முண்டவெந்
திருவி னைத்திரு
வண்ணா மலையனை
உருவி னையுண
ரார்புர மூன்றெய்த
அருவி னையடி
யேன்மறந் துய்வனோ. 8
அருத்த னையர
வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு
வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி
யார்புர மூன்றெய்த
அருத்த னையடி
யேன்மறந் துய்வனோ. 9
அரக்க னையல
றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு
வண்ணா மலையனை
இரக்க மாயென்
உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட
னேன்மறந் துய்வனோ.
திருச்சிற்றம்பலம்