Friday, February 13, 2026
HomeSivan Songsதேனார் மொழிமானாள் | thenar mozhimaanal thannai sereer mayaltheereer lyrics

தேனார் மொழிமானாள் | thenar mozhimaanal thannai sereer mayaltheereer lyrics

Thenar Mozhimaanal thannai sereer mayaltheereer Muthuthandavar Keerthanai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

இராகம்- நாதநாமக்கிரியை-ஏகதாளம்

பல்லவி

தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர்

அனுபல்லவி

மானார் கரனே யம்பல வாணா பணிபூணா (தேனார்)

சரணங்கள்

அளகமதுசரிய முகமலர்வளை நெரியக் களபமுலை புளகமெழக்

கலவி செய்யத் தருணம், வளமைபெறுமக்கு மாலிகைமார் பாவதி

ரூபா, களமார் விடவூணா தில்லைக் கனகசபைவாணா (தேனார்)

அன்னை தான் வசை பேசவே துணையான மாதருமேசவே, கன்

னன் மாமதனெய்யவே மலர்க்கையிற் கங்கணந்தொங்கவே, எ

ன்னதான் செய்வாள் சொல்லீர் மயலெளிதல்லவே நில்லீர், மன்

னு சுந்தரர் தூதா தில்லை மன்றுளாடிய பாதா (தேனார்)

சந்தனஞ்சுடுதென்பள் மனந்தகைத்தால் பகையென்பள் அந்

தியுந் தணலென்பளொரு வல்லு நூறுகமென்பவள், கொந்தார்

கொன்றைத்தாமா நறுங்கோதை யம்பிகைவாமா இந்திரன் றிரு

மாலயன்றொழுமீசா நடராசா (தேனார்)

============

Thenar Mozhimaanal thannai sereer mayaltheereer Muthuthandavar Keerthanai

தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர் கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்ற‌ப்பட்டது.

இந்த | thenar mozhimaanal thannai sereer mayaltheereer lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, சிவன் பாடல்கள், சிவன் பாடல் வரிகள், Carnatic Songs, Muthu Thandavar Compositions தேனார் மொழிமானாள் தன்னைச்சேரீர் மயல்தீரீர் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments