தங்க லப்பிய பாடல் வரிகள் (tanka lappiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமங்கலக்குடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருமங்கலக்குடி
சுவாமி : பிராணநாதேசுவரர்
அம்பாள் : மங்களநாயகி

தங்க லப்பிய

தங்க லப்பிய
தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித்
தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழற்
கொம்பனை யாளொடு
மங்க லக்குடி
மேய மணாளனே. 1

காவி ரியின்வ
டகரைக் காண்டகு
மாவி ரியும்பொ
ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி
ரமனுந் தேடொணாத்
தூவெ ரிச்சுடர்ச்
சோதியுட் சோதியே. 2

மங்க லக்குடி
ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன்
விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர
தாரி சதுர்முகன்
அங்க கத்திய
னும்மர்ச்சித் தாரன்றே. 3

மஞ்சன் வார்கடல்
சூழ்மங்க லக்குடி
நஞ்ச மாரமு
தாக நயந்துகொண்
டஞ்சு மாட
லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய
மாக்கொண்டு நின்றதே. 4

செல்வ மல்கு
திருமங் கலக்குடிச்
செல்வ மல்கு
சிவநிய மத்தராய்ச்
செல்வ மல்கு
செழுமறை யோர்தொழச்
செல்வன் றேவியொ
டுந்திகழ் கோயிலே. 5

மன்னு சீர்மங்
கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப்
பிஞ்ஞகன் றன்பெயர்
உன்னு வாரு
முரைக்கவல் லார்களுந்
துன்னு வார்நன்
னெறிதொடர் வெய்தவே. 6

மாத ரார்மரு
வும்மங்க லக்குடி
ஆதி நாயகன்
அண்டர்கள் நாயகன்
வேத நாயகன்
வேதியர் நாயகன்
பூத நாயகன்
புண்ணிய மூர்த்தியே. 7

வண்டு சேர்பொழில்
சூழ்மங்க லக்குடி
விண்ட தாதையைத்
தாளற வீசிய
சண்ட நாயக
னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி
சூடிய சோதியே. 8

கூசு வாரலர்
குண்டர் குணமிலர்
நேச மேது
மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங்க
லக்குடி மேவிய
ஈசன் வேறு
படுக்கவுய்ந் தேனன்றே. 9

மங்க லக்குடி
யான்கயி லைமலை
அங்க லைத்தெடுக்
குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு
தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு
துய்ந்தனன் தானன்றே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment