List of Tamil Pathikams / Mantras to be recited in all four seasons throughout Shivaratri day in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல். List of Tamil Pathikams / Mantras to be recited in all four seasons throughout Shivaratri day in Tamil

============

சிவராத்திரி முதல் கால நேரத்தில் ஓத வேண்டிய திருப்பதிகங்கள்

1. *உண்ணாமுலை உமையாளொடும்..* எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய *”திருஅண்ணாமலை பதிகம் – திருமுறை – 1″*

2. *”பூவார் மலர் கொண்டு..”* எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் அருளிய *’திருவண்ணாமலை பதிகம் – திருமுறை 1″*

3. *”ஓதிமா மலர்கள் தூவி..* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”திருஅண்ணாமலை திருப்பதிகம் – திருமுறை 4.”*

4. *’வட்டனை மதிசூடியை வானவர்..”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”திருவண்ணாமலை பதிகம் திருமுறை -5.”*

5. *’பட்டி ஏறுகந் தேறிப்..* எனத்தொடங்கும் *”திருஅண்ணாமலை திருப்பதிகம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது திருக்குறுந்தொகை திருமுறை 5″*

6.மாணிக்கவாசகர் அருளிய *”சிவபுராணம்”* திருவாசகம் திருமுறை -8.

============

இரண்டாம் காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்கள்

1. *”வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி..”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”போற்றித்திருத்தாண்டகம் – திருமுறை 6″*

2. பன்னிரு திருமுறையில் இருந்து தொகுக்கப்பட்ட *”1008 போற்றிகள், 276 தலங்களுடைய அர்ச்சனை போற்றிகள்”*

============

மூன்றாம் காலத்தில் ஓதவேண்டிய திருப்பதிகங்கள்

1. *”புக்க ணைந்து புரிந்து அறிகிலர்..*” எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”லிங்க புராணக் குறுந்தொகை திருமுறை 5.”*

2. *”இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி..”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”நின்ற திருத்தாண்டகம் திருமுறை 6.”*

3. *”வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்…”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”திருப்பூவணப் திருப்பதிகம் திருமுறை 6.”*

4. *”துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்..*” எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் அருளிய திருவைந்தெழுத்து பதிகம் திருமுறை – 3.

5. *”காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி..”* எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் அருளிய *”நல்லூர்ப் பெருமணம் பதிகம் திருமுறை – 3″*

6. *”சொற்றுணை வேதியனன் சோதிவானவன்..”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”ஐந்தெழுத்து பதிகம் திருமுறை 4″*

7. *”மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்..*” எனத் தொடங்கும் திரு ஐந்தெழுத்து பதிகம் திருமுறை – 7.

============

நான்காம் காலத்தில் ஓத வேண்டிய மூன்று பதிகங்கள்

1. *”வான் சொட்ட சொட்ட..”* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”திருவீழிமிழலை திருப்பதிகம்”* திருமுறை – 4.

2. *”பற்றற்றார் சேர் பழம்பதியை….* எனத்தொடங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய *”பார் பரவும் பாபநாசம் பதிகம்”* திருமுறை – 4 .

3. திருஞானசம்பந்தர் அருளிய *”திரு எழுகூற்றிருக்கை”* திருமுறை 3.

4. *”திருஐந்தெழுத்து நாமாவளி”*

இந்த சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment