Suvarnamala Stuti in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவ ஸுவர்ணமாலா ஸ்துதி | ஸுவர்ணமாலா ஸ்துதி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Shiva Suvarnamala Stuti in Tamil Lyrics

அத கதமபி மத்ரஸநாம் த்வத்குணலேசைர்விசோதயாமி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧||

ஆகண்டலமதகண்டனபண்டித தண்டுப்ரிய சண்டீச விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨||

இபசர்மாம்பர சம்பரரிபுவபுரபஹரணோஜ்வலநயன விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩||

ஈச கிரீச நரேச பரேச மஹேச பிலேசயபூஷண போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௪||

உமயா திவ்யஸுமங்களவிக்ரஹயாலிங்கிதவாமாங்க விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௫||

ஊரீகுரு மாமஜ்ஞமநாதம் தூரீகுரு மே துரிதம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௬||

ருஷிவரமானஸஹம்ஸ சராசரஜனனஸ்திதிகாரண போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௭||

ரூக்ஷாதீசகிரீட மஹோக்ஷாரூட வித்ருதருத்ராக்ஷ விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௮||

லிவர்ணத்வந்த்வமவ்ருந்தஸுகுஸுமமிவாங்க்ரௌ தவார்பயாமி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௯||

ஏகம் ஸதிதி ச்ருத்யா த்வமேவ ஸதஸீத்யுபாஸ்மஹே ம்ருட போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧0||

ஐக்யம் நிஜபக்தேப்யோ விதரஸி விச்வம்பரோ(அ)த்ர ஸாக்ஷீ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௧||

ஓமிதி தவ நிர்தேஷ்ட்ரீ மாயா(அ)ஸ்மாகம் ம்ருடோபகர்த்ரீ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௨||

ஔதாஸ்யம் ஸ்புடயதி விஷயேஷு திகம்பரதா ச தவைவ விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௩||

அந்த: கரணவிசுத்திம் பக்திம் ச த்வயி ஸதீம் ப்ரதேஹி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௪||

அஸ்தோபாதிஸமஸ்தவ்யஸ்தை ரூபைர்ஜகன்மயோ(அ)ஸி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௫||

கருணாவருணாலய மயி தாஸ உதாஸஸ்தவோசிதோ ந ஹி போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௬||

கலஸஹவாஸம் விகடய ஸதாமேவ ஸங்கமனிசம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௭||

கரளம் ஜகதுபக்ருதயே கிலிதம் பவதா ஸமோ(அ)ஸ்தி கோ(அ)த்ர விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௧௮||

கனஸாரகௌரகாத்ர ப்ரசுரஜடாஜூடபத்தகங்க விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௧௯||

ஜ்ஞப்தி: ஸர்வசரீரேஷ்வகண்டிதா யா விபாதி ஸா த்வயி போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨0||

சபலம் மம ஹ்ருதயகபிம் விஷயதுசரம் த்ருடம் பதாந விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௧||

சாயா ஸ்தாணோரபி தவ தாபம் நமதாம் ஹரத்யஹோ சிவ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௨||

ஜய கைலாஸநிவாஸ ப்ரமதகணாதீச பூஸுரார்சித போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௩||

ஜணுதகஜங்கிணுஜணுதத்கிடதகசப்தைர்நடஸி மஹாநட போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௪||

ஜ்ஞானம் விக்ஷேபாவ்ருதிரஹிதம் குரு மே குருஸ்த்வமேவ விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௨௫||

டங்காரஸ்தவ தனுஷோ தலயதி ஹ்ருதயம் த்விஷாமசநிரிவ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௬||

டாக்ருதிரிவ தவ மாயா பஹிரந்த: சூன்யரூபிணீ கலு போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௭||

டம்பரமம்புருஹாமபி தலயத்யநகம் த்வதங்க்ரியுகளம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௮||

டக்காக்ஷஸூத்ரசூலத்ருஹிணகரோடீஸமுல்லஸத்கர போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௨௯||

ணாகாரகர்பிணீ சேச்சுபதா தே சரணகதிர்ந்ருணாமிஹ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩0||

தவ மன்வதிஸஞ்ஜபத: ஸத்யஸ்தரதி நரோ ஹி பவாப்திம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௧ ||

தூத்காரஸ்தஸ்ய முகே பூயாத்தே நாம நாஸ்தி யஸ்ய விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௨||

தயனீயச்ச தயாளு: கோ(அ)ஸ்தி மதன்யஸ்த்வதன்ய இஹ வத போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௩||

தர்மஸ்தாபனதக்ஷ த்ர்யக்ஷ குரோ தக்ஷயஜ்ஞசிக்ஷக போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௩௪||

நனு தாடிதோ(அ)ஸி தனுஷா லுப்ததியா த்வம் புரா நரேண விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௫||

பரிமாதும் தவ மூர்த்திம் நாலமஜஸ்தத்பராத்பரோ(அ)ஸி விபோ|

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௬||

பலமிஹ ந்ருதயா ஜனுஷஸ்த்வத்பதஸேவா ஸனாதநேச விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௭||

பலமாரோக்யம் சாயுஸ்த்வத்குணருசிதாம் சிரம் ப்ரதேஹி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௮||

பகவன் பர்க பயாபஹ பூதபதே பூதிபூஷிதாங்க விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௩௯||

மஹிமா தவ நஹி மாதி ச்ருதிஷு ஹிமானீதராத்மஜாதவ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪0||

யமநியமாதிபிரங்கைர்யமிநோ ஹ்ருதயே பஜந்தி ஸ த்வம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௧||

ரஜ்ஜாவஹிரிவ சுக்தௌ ரஜதமிவ த்வயி ஜகந்தி பாந்தி விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௨||

லப்த்வா பவத்ப்ரஸாதாச்சக்ரம் விதுரவதி லோகமகிலம் போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௩||

வஸுதாதத்தரதச்சயரதமௌர்வீசரபராக்ருதாஸுர போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௪||

சர்வ தேவ ஸர்வோத்தம ஸர்வத துர்வ்ருத்தகர்வஹரண விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௫||

ஷட்ரிபுஷடூர்மிஷட்விகாரஹர ஸன்முக ஷண்முகஜனக விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௬||

ஸத்யம் ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்மேத்யேதல்லக்ஷணலக்ஷித போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௭||

ஹாஹாஹூஹூமுகஸுரகாயககீதபதானவத்ய விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௮||

ளாதிர்ன ஹி ப்ரயோகஸ்ததந்தமிஹ மங்களம் ஸதா(அ)ஸ்து விபோ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் || ௪௯||

க்ஷணமிவ திவஸான்நேஷ்யதி த்வத்பதஸேவாக்ஷணோத்ஸுக: சிவ போ |

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் ||௫0||

இதி ஸ்ரீமத்பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீகோவிந்த பகவத்பூஜ்ய பாதசிஷ்யஸ்ய

ஸ்ரீசங்கரபகவத: க்ருதா ஸுவர்ணமாலாஸ்துதி: ஸம்பூர்ணா||

============

சிவ ஸுவர்ணமாலா ஸ்துதி பொருள்

‘அ’ விலிருந்து ‘க்ஷ’ வரை உள்ள அக்ஷரங்களை வரிசைக்கிரமமாக ச்லோகங்களின் முதலெழுத்தாக வைத்து செய்த துதியாதலால் “ஸுவர்ணமாலா” எனப்பட்டது.

============

ஸ்துதி 01 பொருள்

எங்கும் நிறைந்த பரமேச்வரா! மிகவும் சிரமப்பட்டு உன் குணங்களில் கொஞ்சம் சொல்லுவதால் என் நாக்கை தூய்மைப்படுத்திக் கொள்கிறேன். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே, சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 02 பொருள்

இந்திரனின் கர்வத்தை அடக்குவதில் ஸமர்த்தரும், (தாண்டவத்தை உண்டாக்கிய) தண்டுவுக்குப் பிரியமானவரும், சண்டி தேவிக்குக் கணவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே,! சங்கரனே ! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 03 பொருள்

யானைத்தோலை ஆடையாய்க் கொண்டவரும், மன்மதன் உடலை எரித்த அக்னிக் கண்ணையுடைய வருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே சம்புவே, சங்கரனே உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 04 பொருள்

ஈச்வரன், மலைக்கு ஈச்வரன், மனிதர்க்கு ஈச்வரன், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பரேச, மஹேச! (புற்றில் வசிக்கும்) பாம்பை அணிகலனாய்க் கொண்ட ஏ பரமேச்வரா, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே சம்புவே, சங்கரனே உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 05 பொருள்

ஒளிபொருந்திய மங்களமான உடலோடு கூடிய உமாதேவியால் இடப் பாகத்தில் தழுவப்பெற்ற ஏ பரமேச்வரா ! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 06 பொருள்

ஒன்றும் தெரியாதவனும், கதியற்றவனுமான என்னை ஏற்றுக்கொண்டு என் பாபங்களைத் துரத்துவாய் ஏ! பசமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 07 பொருள்

உயர்ந்த ரிஷிகளின் மனதிற்கு ஹம்ஸமாய் விளங்குகிறவரும், அசைவதும் அசையாததுமான வஸ்துக்களுக்கு பிறப்பு, வளர்ப்பு, அழிவு இவற்றின் காரணருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 08 பொருள்

நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனைக் கிரீடமாகக் கொண்டவரும், பெரிய காளைமாட்டை வாகனமாய்க் கொண்டவரும் ருத்ராக்ஷம் பூண்டவரும் எங்கும் நிறைந்தவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 09 பொருள்

என் இரண்டு கண்களாகிற காம்பற்ற மலர்களை உன் திருவடிகளில் அர்ப்பணம் செய்கிறேன். ஏ பரமேச்வரா! நீயே எனக்குச் சரணம். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 10 பொருள்

ஒன்றே ஸத்யம் எனும் வேதவாக்யத்தால் நீயே அந்த சத்யமாக இருக்கிறாய் என்று உபாஸிக்கிறேன். ம்ருட (இரண்டும் அளிக்கும்) பரமேச்வர, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 11 பொருள்

உன்னைத்தொழும் பக்தர்களுக்கு உன்னோடு ஐக்யத்தை அருள்புரிகிறாய். எல்லா உலகையும் தாங்குகிறாய், இங்கு (எல்லாவற்றிலும்) சாக்ஷியாக இருக்கிறாய். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே; உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – ஆச்சரியமாயும், பலவாய் உண்டாவதும் இருப்பதும் ஆன இவ்வுலகு எல்லாம் ருத்ரனே, அந்த ஈச்வரனுக்கு நமஸ்காரம் இந்த வேத வாக்யமே, இந்த சுலோகத்தில் மூலமாய்க் கொள்ளலாம்.

============

ஸ்துதி 12 பொருள்

‘ஓம்’ எனும் இந்த எழுத்தானது உன்னையே மாயையைத் தாண்டிய பரம்பொருளாய்க் குறிக்கிறது, ம்ருடனான உன்னைத் தெரிந்துகொள்ள எனக்கும் மிகவும் உதவியாயிருக்கிறது. ஏ! பரமேச்வரா, அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்கும் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 13 பொருள்

நீ திக்குகளை ஆடையாய்க் கொண்டிருப்பது உலக விஷயங்களில் உனக்குள்ள பற்றின்மையையே காட்டுகிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 14 பொருள்

உள்ளேயிருப்பதான மனதிற்குத் தூய்மையும், உன்னிடத்தில் நிலைத்திருக்கும் படியான பக்தியையும் கொடுக்கவேண்டுகிறேன். ஏ பரமேச்வரா? அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 15 பொருள்

தடையற்ற மொத்த முழுப் பொருளும் தனித்தனியானதுமான உன் உருவங்களால் சிவமயமான நீ எல்லா உலகமாயிருக்கிறாய்! ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 16 பொருள்

கருணைக்கடலே! உன் வேலைக்காரனான என்னிடத்தில் பாராமுகம் காட்டுவது உசிதமல்ல! எ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 17 பொருள்

கெட்டவர்களோடு சேர்க்கையைத் தடுத்து நல்லவர்களுடன் எப்போதும் கூடும்படி செய்! ஏ பரமேச்வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 18 பொருள்

உலகிற்கு உதவி செய்வதற்காக (பாற்கடலில் அமுதம் கடையும் பொழு துண்டான) விஷத்தை உண்ட உனக்கு நிகர் உலகில் ஒருவருமில்லை. ஏ பரமேச் வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 19 பொருள்

கற்பூரம் போல் வெளுத்த உடலை உடையவரே! மிகப் பெரியதான ஜடை வைத்துள்ள ஏ பரமேச்வரா! அம்பாளுடன் கூடிய ஸாம்ப ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 20 பொருள்

எல்லா சரீரங்களிலும் பிரிவுபடாத அறிவாக விளங்குகிற சக்தியாகிய பரம்பொருள் நீயே. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 21 பொருள்

என் மனதாகிற குரங்கு உலக விஷயங்களில் அலைகிறது. இதை நிலை நிறுத்த வேண்டுகிறேன். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 22 பொருள்

விந்தை! ஸ்தாணு (பட்டுப் போன மரம்) என்று பெயர் பெற்ற போதிலும் உன் நிழல் பட்ட மாத்திரத்தில் வணங்குகிறவர்களின் தாபங்களை போக்கடிக்கிற ஏ சிவ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 23 பொருள்

கைலையங்கிரியில் வாழ்பவரும் ப்ரமதகணங்களின் தலைவரும் அந்தணர்களால் பூஜிக்கப்பட்டவருமான ஏ பரமேச்வரா! வெல்க! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 24 பொருள்

ஜணு, தக, ஜங்கிணு. ஜணு, தத்கிட, தக என்ற ஒலியுடன் நடனம் புரியும் பெரிய நடனான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 25 பொருள்

நீயே (தக்ஷிணாமூர்த்தி), குரு உருவாயிருந்து இருப்பதை மறைப்பது. இல்லாததைத் தோற்று விட்டதுமான சக்தியின் செயல் நீங்கிய ஞானத்தை எனக்கு அருள்புரிவாய் ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – ஆவ்நதி – உள்ளதை மறைப்பது; விக்ஷேப சக்தி – இல்லாததை இருப்பது போல் காட்டுவது; ஞானம் – பரம்பொருளை அறியும் அறிவு.

============

ஸ்துதி 26 பொருள்

உன் (பிநாகம் எனும்) வில்லின் நாண் ஓசை, கேட்ட மாத்திரத்திலேயே இடியோசை போல் பகைவர்கள் மனத்தை பிளக்கிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 27 பொருள்

பூஜ்யத்தைப் போல உள்ளும், வெளியும் இல்லாத ஒன்றல்லவோ உன் வசமுள்ள மாயை. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – மாயையை ப்ரக்ருதியாகவும் அதை தன் வசம் கொண்டவன் மாயீ என்றும் சுருதி சொல்லுகிறது.

============

ஸ்துதி 28 பொருள்

செந்தாமரையின் புகழையும் தோற்கடிப்பன உன் மாசற்ற திருவடிகள். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே, உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 29 பொருள்

உடுக்கை, ஜபமாலை, சூலம், பிரம்மகபாலம் இவைகளைக் கையில் கொண்ட ஏ பரமேச்வரா! அம்பளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 30 பொருள்

‘ந’ என்ற எழுத்தின் வடிவைக் கொண்ட உன் அம்புப் பெட்டியில் உள்ள அம்பானது (எங்களை நோக்கி) வெளியில் வராத வரை மனிதர்களுக்கு நன்மையே செய்யும். ஏ பரமேச்வரா ! நீயே எனக்குச் சரணம். அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 31 பொருள்

உன் திருமந்திரமான ஐந்தெழுத்தை மிகுதியாக ஜபம் செய்கிறவன் உடனேயே பிறவிக்கடலை கடக்கிறான். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே, சம்புவே, சங்கரனே, உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 32 பொருள்

எவன் உன் நாமத்தை சொல்லவில்லையோ, ஜனங்கள் அவனைத் ‘தூ’ என்று சொல்லட்டும். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப. சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 33 பொருள்

இங்கு தயை வேண்டுபவனும் தயை உடையவனும் முறையே என்னையும் உன்னையும் தவிர வேறு யார்? சொல். ஏ. பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 34 பொருள்

தருமத்தை நிலைநாட்டுவதில் வல்லவரும். முக்கண்ணரும், குருவின் உருவானவரும், தக்ஷனின் யாகத்தை அழித்தவருமான ஏ பரமேச்வரா! அம்பா ளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 35 பொருள்

வேடனாய் வந்த உன்னை மனிதன் (அர்ஜுனன்) முன்பு பேராசை கொண்டு வில்லால் அடித்தான் அன்றோ! ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 36 பொருள்

(லிங்க) மூர்த்தியான உன்னை அளக்க பிரும்மாவாலும், விஷ்ணுவாலும் கூட முடியவில்லை. அப்பாலுக்கு அப்பாலான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 37 பொருள்

உன் திருவடித் தொண்டில் ஈடுபட்ட மனிதனுக்கு அவன் மனிதனாக இருக்கிற காரணத்தால் தான் இங்கேயே எல்லாவற்றையும் கொடுத்து அருள் புரிகிறாய். ஏ ஆதி ஈசனான பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதா சிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 38 பொருள்

பலம், நோயற்ற தன்மை, ஆயுள், உன் குணங்களில் இன்புறுதல், இவைகளை வெகுகாலம் எனக்கு நன்கு கொடுத்தருள்வாய். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 39 பொருள்

பர்க்கன் (சூரியன்) எனப் பெயர் பெற்ற இறைவனே, அச்சத்தைப் போக் கடிப்பவனே, பூதங்களுக்குத் தலைவனே, உடல் முழுதும் விபூதியைப் பூசியவனே, ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 40 பொருள்

பனிமலையின் புதல்வியான உமையின் கணவரே, வேதங்களில் கூட உன் மஹிமை முழுதும் அளக்கப்படவில்லை. ஏ பரமேசவரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 41 பொருள்

யமம், நியமம், ஆஸனம் ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம், ஸமாதி முதலிய (எட்டு) அங்கங்களால் யோகம் செய்து உன்னை மனதில் காணுபவரே யோகியர். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 42 பொருள்

கயிற்றில் பாம்பு தோன்றுவது போலும் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போலும் பரமனாகிய உன்னிடத்தில் உலகம் (தோற்ற மாத்திரமே) பிரகாசிக்கிறது. ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – ஆதிசங்கரர் தான் ஸ்தாபித்த அத்வைத மதத்தை இங்கு உதாரணத்தோடு சுட்டிக்காட்டுகிறார். பிரம்மமே உண்மை, உலகம் பொய், என்னும் உண்மை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

============

ஸ்துதி 43 பொருள்

உன் அருளினால் சக்கரம் பெற்று விஷ்ணு உலகத்தைக் காக்கிறான். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 44 பொருள்

பூமியைத் தேராகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புர அரக்கர்களை தோல்வியுறச் செய்த ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – யஜுர்வேதம் ஆறாவது காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள திரிபுர ஸம்ஹாரக் கதை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

============

ஸ்துதி 45 பொருள்

சம்ஹராமூர்த்தியே! எல்லோரிலும் சிறந்த தெய்வமே, அனைத்தும் அளிப்போனே, நடத்தை கெட்டவர்களின் செருக்கை அடக்குபவருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! : சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 46 பொருள்

ஆறு பகைவர்களையும், ஆறு மாறுதல்களையும் ஆறு அலைகளையும் போக் கடிப்பவரும், சத்தியத்தை முன்னிட்ட முருகனுக்கு தகப்பனாருமான ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாய் இருக்கட்டும்.

குறிப்பு: – காமம், க்ரோதம், லோபம், மோஷம், மதம், மாத்ஸர்யம் என்பவை அறுபகைகள்; பிறத்தல், இருத்தல், வளர்த்தல், மாறுதல், தேர்தல், மறைதல் என்பவை ஆறு மாறுபாடுகள் – பசி, பிணி, முதுமை, சாவு, இன்பம், துன்பம் இவை ஆறு அலைகள்.

============

ஸ்துதி 47 பொருள்

உண்மை, அறிவு, முடிவற்றது பரம்பொருள் என்னும் (உபநிஷத) குறிப்பால் லக்ஷ்யமாகக் காட்டப்படும் பரம்பொருளே, ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

குறிப்பு: – பொய்யான, அறிவற்ற, அழிகின்ற உலகத்தினின்று வேறுபட்டது பரம்பொருள் என்பது இங்கே குறிப்பு.

============

ஸ்துதி 48 பொருள்

ஹாஹா, ஹுஹு என்ற கந்தர்வர்களின் தலைமையில் தேவப்பாடல்களோடு பாடப்பட்ட திருவடிகளையுடைய ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 49 பொருள்

‘ள’ என்ற எழுத்தை முதலாகக் கொண்ட சொற்பிரயோகம் இல்லை; அதை இறுதியில் கொண்ட மங்களம் கொண்டு உண்டாகட்டும். ஏ பரமேச்வரா! அம்பாளோடு கூடிய ஸாம்ப, ஸதாசிவனே! சம்புவே! சங்கரனே! உன் இரண்டு திருவடிகள் எனக்குப் புகலாக இருக்கட்டும்.

============

ஸ்துதி 50 பொருள்

உன் திருவடி சேவை செய்வதில் ஆவல் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு க்ஷணம் மாதிரியே கழிந்துவிடுகிறது. அம்பாளோடு கூடிய வரும், ஸாம்ப, ஸதாசிவரும், சம்புவும், சங்கரருமான ஏ பரமேச்வரா! உன் இரு பாதமே என் புகலிடம்.

இந்த சிவ ஸுவர்ணமாலா ஸ்துதி | ஸுவர்ணமாலா ஸ்துதி | shiva suvarnamala sthuti tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva Stotram, Stotram சிவ ஸுவர்ணமாலா ஸ்துதி | ஸுவர்ணமாலா ஸ்துதி சிவ ஸுவர்ணமாலா ஸ்துதி | ஸுவர்ணமாலா ஸ்துதி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment