Thursday, November 13, 2025
HomeSivan Songsபுனலா டியபுன் பாடல் வரிகள் | punala tiyapun Thevaram song lyrics in tamil

புனலா டியபுன் பாடல் வரிகள் | punala tiyapun Thevaram song lyrics in tamil

புனலா டியபுன் பாடல் வரிகள் (punala tiyapun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகழிப்பாலை – சிவபுரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருகழிப்பாலை – சிவபுரி
சுவாமி : பால்வண்ணநாதர்
அம்பாள் : வேதநாயகியம்மை

புனலா டியபுன்

புனலா டியபுன்
சடையாய் அரணம்
அனலா கவிழித்
தவனே அழகார்
கனலா டலினாய்
கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை
தொழுதுள் குதுமே. 1

துணையா கவொர்தூ
வளமா தினையும்
இணையா கவுகந்
தவனே இறைவா
கணையால் எயிலெய்
கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத்
தஇடர் கெடுமே. 2

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் மவையே. 3

எளியாய் அரியாய்
நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென
வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே
தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா
லையமர்ந் தவனே. 4

நடம்நண் ணியொர்நா
கமசைத் தவனே
விடம்நண் ணியதூ
மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப்
பதிகா வலனே
உடன்நண் ணிவணங்
குவனுன் னடியே. 5

பிறையார் சடையாய்
பெரியாய் பெரியம்
மறையார் தருவாய்
மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ்
கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத்
தஇடர் கெடுமே. 6

முதிருஞ் சடையின்
முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய்
கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால்
இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா
யினஆ சறுமே. 7

எரியார் கணையால்
எயிலெய் தவனே
விரியார் தருவீழ்
சடையாய் இரவிற்
கரிகா டலினாய்
கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங்
குவனுன் னடியே. 8

நலநா ரணன்நான்
முகன்நண் ணலுறக்
கனலா னவனே
கழிப்பா லையுளாய்
உனவார் கழலே
தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான்
எயிலெய் தவனே. 9

தவர்கொண் டதொழிற்
சமண்வே டரொடுந்
துவர்கொண் டனநுண்
துகிலா டையரும்
அவர்கொண் டனவிட்
டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழிப்
பதியுள் குதுமே. 10

கழியார் பதிகா
வலனைப் புகலிப்
பழியா மறைஞா
னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண்
டடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ
ரொடுகே டிலரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது;

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments