பொருவ னார்புரி நூலர் பாடல் வரிகள் (poruva narpuri nular) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாஞ்சியம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாஞ்சியம்பொருவ னார்புரி நூலர்

பொருவ னார்புரி நூலர்
புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை
ஊழ்வினை நலிய வொட்டாரே. 1

தொறுவில் ஆனிள ஏறு
துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச்
செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள்
காண்தகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு
பூசுதல் மன்னுமொன் றுடைத்தே. 2

தூர்த்தர் மூவெயி லெய்து
சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற்
பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத்
திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங்
கொருதலை பலதலை யுடைத்தே. 3

சள்ளை வெள்ளையங் குருகு
தானது வாம்எனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி
மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும்
விகிர்தமொன் றொழிகிலர் தாமே. 4

மைகொள் கண்டர்எண் தோளர்
மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை
குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி
கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது பரிசே. 5

கரந்தை கூவிள மாலை
கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
வல்வினை நலிய வொட்டாரே. 6

அருவி பாய்தரு கழனி
அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக்
குருகினம் இரிதரு கிடங்கில்
பருவ ரால்குதி கொள்ளும்
பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா
இறைவன தறைகழல் சரணே. 7

களங்க ளார்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற்
குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலி விலரே. 8

வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற்
கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற்
செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால்
இறையெனக் கருதுத லிலமே. 9

செந்நெ லங்கலங் கழனித்
திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம்
இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப்
பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை
பாடுமின் பத்தரு ளீரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment