Poovar Malar Kondu Thiruvannamalai Pathigam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பூவார் மலர் கொண்டு – திருவண்ணாமலை பதிகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
பூவார் மலர் கொண்டு பாடல்
============
சிவராத்திரி முதல் கால நேரத்தில் ஓத வேண்டிய பதிகம்
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே.
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்
அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்
“திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட,
அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,
கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,
ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!
வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,
அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.
**** இப்பதிகங்கள் இணைய தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டவை. பிழைகள் இருக்க கூடும். ஆதலினால் உங்களது கருத்துக்களை கீழ்க்காணும் கருத்து பதிவிடலில் பதிவிடவும். ***
இந்த பூவார் மலர் கொண்டு – திருவண்ணாமலை பதிகம் | poovar malar kondu thiruvannamalai pathigam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், சிவராத்திரி பாடல்கள், Sivarathri Songs பூவார் மலர் கொண்டு – திருவண்ணாமலை பதிகம் பூவார் மலர் கொண்டு – திருவண்ணாமலை பதிகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…