Monday, December 8, 2025
HomeSivan Songsபண்காட் டிப்படி பாடல் வரிகள் | pankat tippati Thevaram song lyrics in tamil

பண்காட் டிப்படி பாடல் வரிகள் | pankat tippati Thevaram song lyrics in tamil

பண்காட் டிப்படி பாடல் வரிகள் (pankat tippati) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்காடு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெண்காடு
சுவாமி : சுவேதாரண்யேஸ்வரர்
அம்பாள் : பிரம்மவித்யாம்பிகை

பண்காட் டிப்படி

பண்காட் டிப்படி
யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில்
நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச்
சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந்
துய்ம்மட நெஞ்சமே. 1

கொள்ளி வெந்தழல்
வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ்
சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி
யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு
வெண்கா டடைநெஞ்சே. 2

ஊனோக் குமின்பம்
வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி
யாவது நின்மினோ
தானோக் குந்தன்
னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு
வெண்கா டடைநெஞ்சே. 3

பருவெண் கோட்டுப்பைங்
கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின்
றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை
வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந்
துய்ம்மட நெஞ்சமே. 4

பற்ற வன்கங்கை
பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை
யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய
வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு
வெண்கா டடைநெஞ்சே. 5

கூடி னானுமை
யாளொரு பாகமாய்
வேட னாய்விச
யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ
னார்சிந்தை மேயவெண்
காட னாரடி
யேஅடை நெஞ்சமே. 6

தரித்த வன்கங்கை
பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை
யான்கய வர்புரம்
எரித்த வன்மறை
நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை
வெண்கா டடைநெஞ்சே. 7

பட்டம் இண்டை
யவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன்
றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா
னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன்
வெண்காடு அடைநெஞ்சே. 8

ஏன வேடத்தி
னானும் பிரமனும்
தான வேடமுன்
தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன்
விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன்
வெண்காடு அடைநெஞ்சே. 9

பாலை யாடுவர்
பன்மறை ஒதுவர்
சேலை யாடிய
கண்ணுமை பங்கனார்
வேலை யார்விடம்
உண்டவெண் காடர்க்கு
மாலை யாவது
மாண்டவர் அங்கமே. 10

இராவ ணம் செய
மாமதி பற்றவை
இராவ ணம்உடை
யான்றனை உள்குமின்
இராவ ணன்றனை
ஊன்றி அருள்செய்த
இராவ ணன் திரு
வெண்காடு அடைமினே.

சோழநாட்டுத்தலம்.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments