Padaiyar Maluvondru Thevaram song lyrics tamil
படையார் மழுவொன்று பாடல் வரிகள் (Padaiyar Maluvondru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
படையார் மழுவொன்று
படையார் மழுவொன்று பற்றிய
கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க
ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை
விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா
திருக்கும் பெரும்பதியே.
சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 1