Thursday, November 13, 2025
HomeSivan Songsபாச மொன்றில பாடல் வரிகள் | paca monrila Thevaram song lyrics in tamil

பாச மொன்றில பாடல் வரிகள் | paca monrila Thevaram song lyrics in tamil

பாச மொன்றில பாடல் வரிகள் (paca monrila) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேசுவரர்
அம்பாள் : பெருநலமுலையம்மை

பாச மொன்றில

பாச மொன்றில
ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர்
கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு
மான்இடை மருதினிற்
பூச நாம்புகு
தும்புன லாடவே. 1

மறையின் நாண்மலர்
கொண்டடி வானவர்
முறையி னான்முனி
கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு
மான்இடை மருதினில்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 2

கொன்றை மாலையுங்
கூவிள மத்தமுஞ்
சென்று சேரத்
திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை
பிரான்இடை மருதினை
நன்று கைதொழு
வார்வினை நாசமே. 3

இம்மை வானவர்
செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற
வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும்
இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு
வார்வினை சிந்துமே. 4

வண்ட ணைந்தன
வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த
சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும்
இடைமரு தாவென
விண்டு போயறும்
மேலை வினைகளே. 5

ஏற தேறும்
இடைமரு தீசனார்
கூறு வார்வினை
தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை
வைத்த அழகனார்க்
கூறி யூறி
உருகுமென் உள்ளமே. 6

விண்ணு ளாரும்
விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும்
மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில்
சூழிடை மருதினை
நண்ணி னாரைநண்
ணாவினை நாசமே. 7

வெந்த வெண்பொடிப்
பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள்
சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை
மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை
வார்வினை தேயுமே. 8

வேத மோதும்
விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின்
றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும்
இடைமரு தாவென்று
பாத மேத்தப்
பறையுநம் பாவமே. 9

கனியி னுங்கட்டி
பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற்
பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித்
தாளு மரசினும்
இனியன் றன்னடைந்
தார்க்கிடை மருதனே. 10

முற்றி லாமதி
சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை
யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி
யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற்
றாவினை பாவமே.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments