ஒன்று வெண்பிறைக் பாடல் வரிகள் (onru venpiraik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தனி தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : தனிஒன்று வெண்பிறைக்

ஒன்று வெண்பிறைக்
கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை
யோடு முடுத்தது
ஒன்று வெண்டலை
யேந்தியெம் முள்ளத்தே
ஒன்றி நின்றங்
குறையும் ஒருவனே. 1

இரண்டு மாமவர்க்
குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க்
குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள
மானெமை யாளுகந்
திரண்டு போதுமென்
சிந்தையுள் வைகுமே. 2

மூன்று மூர்த்தியுள்
நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின
மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன்
தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென்
சிந்தையுள் மூழ்குமே. 3

நாலின் மேன்முகஞ்
செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந்
திட்டது மின்பமாம்
நாலு வேதஞ்
சரித்தது நன்னெறி
நாலு போலெம்
அகத்துறை நாதனே. 4

அஞ்சு மஞ்சுமோ
ராடி யரைமிசை
அஞ்சு போலரை
யார்த்ததின் தத்துவம்
அஞ்சு மஞ்சுமோ
ரோரைஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம்
அகத்துறை ஆதியே. 5

ஆறு கால்வண்டு
மூசிய கொன்றையன்
ஆறு சூடிய
அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க்
கச்சம யப்பொருள்
ஆறு போலெம்
அகத்துறை ஆதியே. 6

ஏழு மாமலை
ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி
ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள்
செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி
யேன்மனத் துள்ளவே. 7

எட்டு மூர்த்தியாய்
நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குணத்
தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு
மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு
மெம்மு ளொடுங்குமே. 8

ஒன்ப தொன்பதி
யானை யொளிகளி
றொன்ப தொன்பது
பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை
தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின்
றென்னு ளொடுங்குமே. 9

பத்து நூறவன்
வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன்
பல்சடை தோண்மிசை
பத்தி யாமில
மாதலின் ஞானத்தாற்
பத்தி யானிடங்
கொண்டது பள்ளியே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment