நொந்தா ஒண்சுடரே நுனையே பாடல் வரிகள் (nonta oncutare nunaiye) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிமேற்றளி – காஞ்சிபுரம்(பிள்ளைப்பாளையம்) தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிமேற்றளி – காஞ்சிபுரம்(பிள்ளைப்பாளையம்)நொந்தா ஒண்சுடரே நுனையே

நொந்தா ஒண்சுடரே
நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான்
திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால்
இனியேத்த மாட்டேனே. 1

ஆட்டான் பட்டமையால்
அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம்
பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ்
திருமேற் றளியுறையும்
மாட்டே உன்னையல்லால்
மகிழ்ந்தேத்த மாட்டேனே. 2

மோறாந் தோரொருகால்
நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம்
புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித்
திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால்
இனியேத்த மாட்டேனே. 3

உற்றார் சுற்றமெனும்
அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென்
இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந்
திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னையல்லால்
பணிந்தேத்த மாட்டேனே. 4

எம்மான் எம்மனையென்
றவரிட் டிறந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த்
தருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா வீருரியாய்
கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால்
பெரிதேத்த மாட்டேனே. 5

நானேல் உன்னடியே
நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம்
புகுந்தாயென் ஒண்சுடரே
தேனே இன்னமுதே
திருமேற் றளியுறையுங்
கோனே உன்னையல்லாற்
குளிர்ந்தேத்த மாட்டேனே. 6

கையார் வெஞ்சிலைநா
ணதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும்
எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத்
திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 7

விரையார் கொன்றையினாய்
விமலாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால்
உடலில்லுயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித்
திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 8

நிலையாய் நின்னடியே
நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப்
பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ்
திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால்
மகிழ்ந்தேத்த மாட்டேனே. 9

பாரூர் பல்லவனூர்
மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற்
றிருமேற் றளிச்சிவனை
ஆரூ ரன்னடியான்
அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார்
சிவலோகஞ் சேர்வாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment