நெடியமால் பிரம பாடல் வரிகள் (netiyamal pirama) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்குறுக்கை – கொருக்கை தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்குறுக்கை – கொருக்கை
சுவாமி : வீரட்டேசுவரர்
அம்பாள் : ஞானாம்பிகையம்மை

நெடியமால் பிரம

நெடியமால் பிரம னோடு
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்
அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 1

ஆத்தமாம் அயனு மாலும்
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மீமுன்
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.

சுவாமி : வீரட்டேசுவரர்; அம்பாள் : ஞானாம்பிகையம்மை. 2

Leave a Comment