Nandheeshwara engal Nandheeshwara Lyrics Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி வரிகள் . Nandheeshwara engal Nandheeshwara Lyrics Tamil
நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா
நந்தீஸ்வரா எங்கள் நந்தீஸ்வரா
============
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி
வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி
வேந்தன் நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன் கூரிலே சாய்ந்த நந்தி
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்விக்க எம் இல்லம் வருக நந்தி
இந்த | nandheeshwara engal nandheeshwara பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Pradosham nandi songs lyrics சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…