Guruvayoorappa Namaskaram Seykintrom இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் கிருஷ்ணன் பஜனை பாடல் வரிகள் . Guruvayoorappa Namaskaram Seykintrom Krishna Bhajan Songs Lyrics in Tamil.

============

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு

கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக்கொண்டு நிற்கும்

நந்தகோபாலனே நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

எண்ணை ஸ்னானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்

கண்ணன் உன்பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில்முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

குடம் குடமாகப் பாலை அபிஷேகம் செய்யும் வேளை

கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

கொண்டை மயில் பீலி மின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு

குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்.

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

தெச்சி மந்தாரம் துளசி தாமரைப்பூ மாலை சாத்தி

அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

திவ்யநாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றி வந்து

ஸ்ரீதரா உனக்கு நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

தீராவினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்

நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

கோவில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாபம் தீர

குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

இந்த குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் | guruvayoorappa namaskaram seykintrom பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், கிருஷ்ணன் பஜனை பாடல்கள் குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment