Namachivaya Mantra Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நமசிவாய மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நமசிவாய மந்திரம் – பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் – Namachivaya Mantra Tamil Lyrics Tamil

============

நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்

நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்

ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்

நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட

நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே

வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்

வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்

பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)

தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது

சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது

விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே

வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)

புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்

பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்

வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை

வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)

இந்த | namachivaya mantra tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை நமசிவாய மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment