முத்தூ ரும்புனல் பாடல் வரிகள் (muttu rumpunal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அரிசிற்கரைப்புத்தூர் – அழகாபுத்தூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அரிசிற்கரைப்புத்தூர் – அழகாபுத்தூர்
சுவாமி : படிக்காசுவைத்த பரமர்
அம்பாள் : சிவாம்பிகை
முத்தூ ரும்புனல்
முத்தூ ரும்புனல்
மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி
போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல
னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை
மாற்றவும் வல்லரே. 1
பிறைக்க ணிச்சடை
யெம்பெரு மானென்று
கறைக்க ணித்தவர்
கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு
காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும்
புத்தூர்ப் புனிதரே. 2
அரிசி லின்கரை
மேலணி யார்தரு
புரிசை நந்திருப்
புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர
விப்பணி வார்க்கெலாந்
துரிசில் நன்னெறி
தோன்றிடுங் காண்மினே. 3
வேத னைமிகு
வீணையில் மேவிய
கீத னைக்கிள
ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல்
சூழ்ந்தபுத் தூரனை
நாத னைந்நினைந்
தென்மனம் நையுமே. 4
அருப்புப் போன்முலை
யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை
விட்டுநல் லிட்டமாய்த்
திருப்புத் தூரனைச்
சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும்
அண்ணிக்குங் காண்மினே. 5
பாம்பொ டுமதி
யும்படர் புன்சடைப்
பூம்பு னலும்பொ
திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி
போற்றிட நாடொறுஞ்
சாம்பல் என்பு
தனக்கணி யாகுமே. 6
கனலங் கைதனி
லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின்
றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை
மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர்
போலும்புத் தூரரே. 7
காற்றி னுங்கடி
தாகி நடப்பதோர்
ஏற்றி னும்மிசைந்
தேறுவர் என்பொடு
நீற்றி னையணி
வர்நினை வாய்த்தமைப்
போற்றி யென்பவர்க்
கன்பர்புத் தூரரே. 8
முன்னும் முப்புரஞ்
செற்றன ராயினும்
அன்ன மொப்பர்
அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர்
விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத்
தூரெம் புனிதரே. 9
செருத்த னால்தன
தேர்செல வுய்த்திடுங்
கருத்த னாய்க்கயி
லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப்
பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி
லார்ந்தபுத் தூரரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்