முந்தையூர் முதுகுன்றங் பாடல் வரிகள் (muntaiyur mutukunran) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஇடையாறு தலம் நடுநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : நடுநாடு
தலம் : திருஇடையாறுமுந்தையூர் முதுகுன்றங்

முந்தையூர் முதுகுன்றங்
குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென்
றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு
பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 1

சுற்றுமூர் சுழியல்
திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர்
திருவூறல் ஒழியாப்
*பெற்றமேறிப் பெண்பாதி
யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான்
இடையா றிடைமருதே.
( * பெற்றம் ஊர்தி என்றும் பாடம்) 2

கடங்களூர் திருக்காரிக்
கரைகயி லாயம்
விடங்களூர் திருவெண்ணி
அண்ணா மலைவெய்ய
படங்களூர் கின்றபாம்
பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 3

கச்சையூர் காவங்
கழுக்குன்றங் காரோணம்
பிச்சையூர் திரிவான்
கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிசிக்கல்
நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 4

நிறையனூர் நின்றியூர்
கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர்
பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு
வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 5

திங்களூர் திருவா
திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர்
நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான்
என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 6

கருக்கநஞ் சமுதுண்ட
கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற்
றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை
யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 7

தேசனூர் வினைதேய
நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி
பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி
நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 8

பேறனூர் பிறைச்சென்
னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா
மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடு
துறைதிருக் கோவல்
ஏறனூர் எய்தமான்
இடையா றிடைமருதே. 9

ஊறிவா யினநாடிய
வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு
மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான்
இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ்
விடமெய் குளிர்வாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment