மட்டு வார்குழ லாளொடு பாடல் வரிகள் (mattu varkula lalotu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சிராப்பள்ளி – திருச்சி(மலைகோட்டை கோவில்) தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சிராப்பள்ளி – திருச்சி(மலைகோட்டை கோவில்)
சுவாமி : தாயுமானேஸ்வரர்
அம்பாள் : மட்டுவார்குழலி

மட்டு வார்குழ லாளொடு

மட்டு வார்குழ
லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்
தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்
கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ்
சிராப்பள்ளிச் செல்வரே. 1

அரிய யன்றலை
வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு
தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப்
பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ
அங்கிருப் பார்களே. 2

அரிச்சி ராப்பகல்
ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ்
சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி
யென்றலுந் தீவினை
நரிச்சி ராது
நடக்கும் நடக்குமே. 3

தாயு மாயெனக்
கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும்
ஆண்ட பெருந்தகை
தேய நாதன்
சிராப்பள்ளி மேவிய
நாய னாரென
நம்வினை நாசமே. 4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment