Lingashtakam Tamil song lyrics | Brahma Murariyar Potridum Lingam Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் லிங்காஷ்டகம் தமிழில் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
லிங்காஷ்டகத்தின் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Brahma Murariyar Potridum Lingam Lyrics in Tamil | Lingashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் வரிகள்
சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் லிங்காஷ்டகத்தை மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.
============
லிங்காஷ்டகம் - தமிழ் பாடல் வரிகள
ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!
தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எறித்த கருணாகர லிங்கம்
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!
வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!
பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!
தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்
தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!
எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!
தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்
தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!
லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….
இந்த | lingashtakam tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Ashtakam லிங்காஷ்டகம் தமிழில் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…