என்னி லாரும் பாடல் வரிகள் (enni larum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவின்னம்பர் – இன்னம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவின்னம்பர் – இன்னம்பூர்
சுவாமி : எழுத்தறிநாதர்
அம்பாள் : கொந்தார் பூங்குழலி

என்னி லாரும்

என்னி லாரும்
எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி
யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர்ப்
பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும்
இன்னம்பர் ஈசனே. 1

மட்டுண் பார்கள்
மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள்
கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள்
ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர்
இன்னம்பர் ஈசனே. 2

கனலுங் கண்ணியுந்
தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ்
சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும்
மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்
தின்னம்பர் ஈசனே. 3

மழைக்கண் மாமயி
லாலும் மகிழ்ச்சியான்
அழைக்குந் தன்னடி
யார்கள்தம் அன்பினைக்
குழைக்குந் தன்னைக்
குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மனத்
தின்னம்பர் ஈசனே. 4

தென்ன வனென்னை
யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி
யம்மறை யோதியான்
முன்ன மன்னவன்
சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற
இன்னம்பர் ஈசனே. 5

விளக்கும் வேறு
படப்பிறர் உள்ளத்தில்
அளக்குந் தன்னடி
யார்மனத் தன்பினைக்
குளக்கும் என்னைக்
குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத்
தின்னம்பர் ஈசனே. 6

சடைக்க ணாள்புன
லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை
நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு
கப்படு வான்நமக்
கிடைக்க ணாய்நின்ற
இன்னம்பர் ஈசனே. 7

தொழுது தூமலர்
தூவித் துதித்துநின்
றழுது காமுற்
றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப்
புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக்
கின்னம்பர் ஈசனே. 8

விரியுந் தண்ணிள
வேனிலில் வெண்பிறை
புரியுங் காமனை
வேவப் புருவமுந்
திரியும் எல்லையில்
மும்மதில் தீயெழுந்
தெரிய நோக்கிய
இன்னம்பர் ஈசனே. 9

சனியும் வெள்ளியுந்
திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி
பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய
காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற
இன்னம்பர் ஈசனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment