Dheena Karunakarane Nataraja Lyrics Tamil
தீன கருணாகரனே நடராஜா (Dheena karunakarane) பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குந்தளவராலி ராகத்தில் பாடப்பட்டது… இந்த பாடலை இயற்றியவர் பாபநாசம் சிவம் அவர்கள்… மேலும் இந்த பாடலை தற்போதுள்ள பல பாடகர்கள் அவர்கள் பாணியில் பாடியுள்ளனர்… தீன கருணாகரனே நடராஜா பாடலின் காணொளி இந்த பதிவில் உள்ளது… இது கார்த்திக் அவர்களால் பாடப்பட்டது…
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும்
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே ||
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே ||
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
Dheena Karunakarane Nataraja Video Song – Karthik with sounds of Isha