சிந்தை வண்ணத்த பாடல் வரிகள் (cintai vannatta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

சிந்தை வண்ணத்த

சிந்தை வண்ணத்த
ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த
ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த
ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு
மாவர்ஐ யாறரே. 1

மூல வண்ணத்த
ராய்முத லாகிய
கோல வண்ணத்த
ராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்த
ராகி நெடும்பளிங்
கால வண்ணத்த
ராவர்ஐ யாறரே. 2

சிந்தை வண்ணமுந்
தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழ
காகிய வண்ணமும்
பந்திக் காலனைப்
பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமு
மாவர்ஐ யாறரே. 3

இருளின் வண்ணமு
மேழிசை வண்ணமுஞ்
சுருளின் வண்ணமுஞ்
சோதியின் வண்ணமும்
மருளு நான்முகன்
மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமு
மாவர்ஐ யாறரே. 4

இழுக்கின் வண்ணங்க
ளாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்க
ளாகியுங் கூடியும்
மழைக்கண் மாமுகி
லாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமு
மாவர்ஐ யாறரே. 5

இண்டை வண்ணமும்
ஏழிசை வண்ணமுந்
தொண்டர் வண்ணமுஞ்
சோதியின் வண்ணமுங்
கண்ட வண்ணங்க
ளாய்க்கனல் மாமணி
அண்ட வண்ணமு
மாவர்ஐ யாறரே. 6

விரும்பும் வண்ணமும்
வேதத்தின் வண்ணமுங்
கரும்பின் இன்மொழிக்
காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை
தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமு
மாவர்ஐ யாறரே. 7

ஊழி வண்ணமும்
ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி
போர்த்ததோர் வண்ணமும்
வாழித் தீயுரு
வாகிய வண்ணமும்
ஆழி வண்ணமு
மாவர்ஐ யாறரே. 8

செய்த வன்றிரு
நீறணி வண்ணமும்
எய்த நோக்கரி
தாகிய வண்ணமுங்
கைது காட்சி
யரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமு
மாவர்ஐ யாறரே. 9

எடுத்த வாளரக்
கன்றிறல் வண்ணமும்
இடர்க்கள் போல்பெரி
தாகிய வண்ணமுங்
கடுத்த கைந்நரம்
பாலிசை வண்ணமும்
அடுத்த வண்ணமு
மாவர்ஐ யாறரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment