Friday, January 16, 2026
HomeSivan SongsAanai mugam song lyrics in tamil | ஆனைமுகம் ஆனவனின் பாடல் வரிகள்

Aanai mugam song lyrics in tamil | ஆனைமுகம் ஆனவனின் பாடல் வரிகள்

Aanai mugam song lyrics in tamil

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே பாடல் வரிகள்

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே
அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே
நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே
சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே
ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே
அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே
பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே
அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments