En Nenjil Pallikondavan song lyrics
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்

சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே
பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி

உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி
உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி
அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் கோதண்டம்
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும் அவ்வாமனனின் பாதம்

ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ர தாரி
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே – உன்
திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே

உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே – உன்
அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே

நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த பல அவதாரம்
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே வாழ்வின் ஆதாரம்

அருள் தரும் தேவா வரம் தர வா வா
அருள் தரும் தேவா வரம் தர வா வா
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
இயற்றியவர்: சேலம் ஈஸ்வர்
இராகம்: கல்யாணி
தாளம்: ஆதி