Manthra Pushpam Vedic Mantra Chanting Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மந்திர புஷ்பம் | Manthra Pushpam Tamil Lyrics காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
யோபாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்தரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (1)
அக்னிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ அக்னேராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (2)
வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (3)
அஸௌவை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ முஷ்யதபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (4)
சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (5)
நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (6)
பர்ஜன்யோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (7)
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோ ப்ஸுனாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி(8)
ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே
ஸமேகா மான்கா மகாமாய மஹ்யம்
காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது
குபேராய வைஷ்ரவணாய
மஹாராஜாய நம
============
மந்திர புஷ்பம் விளக்கம்
Manthra Pushpam (from Taiitriya Samhita) Taiitriya Manthra Kosam
”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம்.
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (3)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)
யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (5)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (6)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (7)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)
யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (8)
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)
யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி (9)
யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)
ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம: (10)
தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.
ஓம் பத்ரம் கர்ணேபி…..(எனும் சாந்தி பாடத்துடன் நிறையும்)
ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி
இந்த | manthra pushpam vedic mantra chanting lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Mantras, Stotram, Veda Mantras in Tamil, Vedic Hymns, Vaishnava Concepts மந்திர புஷ்பம் | Manthra Pushpam Tamil Lyrics போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…