Tuesday, February 17, 2026
HomeAmman Songs| aruthal thedi varuvorkellam anantha veedu song lyrics tamil

| aruthal thedi varuvorkellam anantha veedu song lyrics tamil

Aruthal thedi Varuvorkellam Anantha Veedu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

பொன்னும் புகழும் வாரி கொடுப்பா ஆத்தா மகிழ்வோடு

அவள் நெஞ்சமெல்லாம் அன்பு மணக்கும் குங்குமப் பூக்காடு

(ஆறுதல் தேடி)

ஆலயங்கள் கோடி உண்டு அத்தனைக்கும் பக்தர் உண்டு

சக்தியுள்ள‌ சாமி எது கூறு என்றும் சத்தியத்த‌ காத்து நிற்பது யாரு

நம்ம‌ சித்த‌மெல்லாம் கோயில் கொண்டு நித்தம் சுக‌ வாழ்வு தந்து

காலமெல்லாம் காத்திருப்பா பாரு அந்த‌ ஆதி சக்தி அன்னை புகழ் பாடு

நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா

நீயே எந்தன் தாயல்லவா என்னை ஆளும் தெய்வம் நீயல்லவா

(ஆறுதல் தேடி)

நீரெடுத்து நெத்தியிலே நீயணிஞ்சா துன்பமில்லை வேண்டும் வரம் நீ கேளு

அந்த‌ அள்ளித் தரும் அன்னை முகம் பாரு

நம்ம‌ தாய் இருக்க‌ ஏது குறை சஞ்சலங்கள் ஏதும் இல்லை

நெஞ்சுருக‌ நீ பாடு பாதம் தஞ்சம் என்றே நீ நாடு

உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே

உலகம் ஆளும் உமையவளே என் உயிரின் உயிராய் ஆனவளே

(ஆறுதல் தேடி)

ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

தேவி கருமாரி குடியிருக்கும் திருவேற்காடு

இந்த | aruthal thedi varuvorkellam anantha veedu song lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Karumari Amman, கருமாரி அம்மன் பாடல்கள் ஆறுதல் தேடி வருவோர்க்கெல்லாம் ஆனந்த‌ வீடு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments