Kali Gayatri Mantra Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் காளி காயத்ரி மந்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஓம் காளிகாயை ச வித்மஹே!!
ஸ்மசான வாசின்யை தீமஹி!!
தன்னோ கோரா: ப்ரசோதயாத்!
ஓம் காளி நமஹ!!
ஓம் மாகாளி நமஹ!!
ஓம் ஜெய காளி நமஹ!!
ஓம் உக்கிர காளி நமஹ!!
ஓம் உத்தண்ட காளி நமஹ!!
ஓம் ஓங்கார காளி நமஹ!!
ஓம் ஆஙகார காளி நமஹ!!
ஓம் ருத்ர காளி நமஹ!!
ஓம் நீலி நமஹ!!
ஓம் சூலி நமஹ!!
ஓம் திரிசூலி நமஹ!!
ஓம் முப்புரத்து நீலி நமஹ!!
ஓம் சங்கரி நமஹ!!
ஓம் பயங்கரி நமஹ!!
ஓம் பூரணி நமஹ!!
ஓம் காரணி நமஹ!!
ஓம் மோஹினி நமஹ!!
ஓம் யோகினி நமஹ!!
ஓம் வர்த்தினி நமஹ!!
ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ!!
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ!!
ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ!!
ஓம் பவானி நமஹ!!
ஓம் பைரவி நமஹ!!
ஓம் ஈஸ்வரி நமஹ!!
ஓம் அகிலாண்டேசுவரி நமஹ!!
ஓம் மந்தி தாரணி நமஹ!!
ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ!!
ஓம் காளி!!
ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!
மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி
தஞ்சமென் றுனைப்பணிந்தேன்
இக்கணம் வாடி!
ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி
ஓடோடி வந்தேன்நான்
உன்நிழல் தேடி!
இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி
அருள்எனும் ஒளியேற்றி
மருள்நீக்க வாடி!
விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி
பரிந்தென்னைக் காத்திடவே
விரைந்திங்கு வாடி!
இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி
கருங்காட்டில் அலைகின்றேன்
வழிகாட்ட வாடி!
தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி
என்னிதய மேடையிலே
பதம்பதிக்க வாடி!
குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி
குழைந்துன்னை அழைக்கின்றேன்
மகிழ்ந்திங்கு வாடி!
அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி
ஆசையாய் அழைக்கின்றேன்
அன்னையே வாடி!
கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி
கர்மவினை களைந்திடவே
கருணைகொண்டு வாடி!
திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி – உன்
திருவடிகள் சிந்தையிலே
நிறுத்தும் வரம் தாடி!!
ஆடி ஆடி வருகுதம்மா
ஆடித்தேர் வருகுதம்மா
தேடித் தேடி வந்து நின்றோம்
தேவி உன்னைக் காண வந்தோம்!
வாடி வாடி அழுத முகம்
வாட்டம் தீர வணங்கி நின்றோம்!
ஓடி ஓடி களைத்து விட்டோம்
உன் மடியில் சாய வந்தோம்!
இடி இடியாய் வருவதெல்லாம்
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்!
இன்னல் என்று வந்ததெல்லாம்
இன்னிசையாய் மாறக் கேட்டோம்!!
அம்மா… அம்மா… அம்மா..!
இந்த காளி காயத்ரி மந்திரம் | kali gayatri mantra tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Bhadrakali Songs and Mantras, காளிகாம்பாள் பாடல்கள், Gayatri Mantra காளி காயத்ரி மந்திரம் காளி காயத்ரி மந்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…