Title : ஆதித்ய ஹ்ருதயம் -21-25 | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆதித்ய ஹ்ருதயம் – 21-25 காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள். Aditya Hrudhayam Stotram / Sloka from 21-25 lyrics in tamil – Devotional hymn to Aditya or the Sun God (Surya) and was recited by the sage Agastya to Rāma Tamil Lyrics

============

ஆதித்ய ஹ்ருதயம் (21 முதல் 25 வரை)

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே

நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE

nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE

தப்த சாமீகராபாய – உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு

வஹ்னயே – தீ வடிவானவருக்கு

விஸ்வகர்மனே – உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு

தம அபிநிக்னாய – இருளை அழிப்பவருக்கு

ருசயே – உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு

லோக சாக்ஷினே – உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு

நம: – வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:

பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:

pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: – உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்

தத் ஏவ ஸ்ருஜதி – அவற்றை இவனே பிறப்பிக்கிறான்

ப்ரபு: – இறைவன் இவனே

பாயதி ஏஷ – இவனே காக்கிறான்

தபதி ஏஷ – இவனே வெயிலாகக் காய்கிறான்

வர்ஸதி ஏஷ – இவனே மழையாகப் பொழிகிறான்

கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்

இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:

ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:

yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ – இவனே

பூதேஷு – எல்லா உயிர்களிலும்

சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: – அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)

ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச – இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்

பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் – அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச

யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca

yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ – இவனே

வேதா: – வேதமாகவும்

க்ரத: – சடங்குகளாகவும்

க்ரதூனாம் பலம் – சடங்குகளின் பயனாகவும்

ஏவ ச – இவனே இருக்கிறான்

லோகேஷு – இவ்வுலகத்தில்

யானி க்ருத்யானி – என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ

சர்வ ஏஷ – அவை எல்லாமும் இவனே

ரவி: – ஒளி படைத்தவன்

ப்ரபு: – இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச

கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha

kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:

ராகவ: – இராகவா!

ஏனம் – இவன்

க்ருச்ரேஷு ஆபத்ஸு – எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்

காந்தாரேஷு – காடுகளிலும்

பயேஷு ச – பயமுறுத்தும் நேரங்களிலும்

கீர்த்தயேன புருஷ: – இவனைப் பாடி வழிபடுவோரை

கச்சின் – எப்போதும்

நாவஸீததி – கைவிடமாட்டான்.

இந்த ஆதித்ய ஹ்ருதயம் -21-25 | aditya hrudhayam stotram 21 25 பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Stotram, Mantras, Surya Deva Songs, சூரிய‌ தேவன் பாடல்கள், Aditya Hridayam ஆதித்ய ஹ்ருதயம் -21-25 ஆதித்ய ஹ்ருதயம் – 21-25 போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment