Title : ஆதித்ய ஹ்ருதயம் -16-20 | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆதித்ய ஹ்ருதயம் – 16-20 காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் 16 முதல் 20 வரையிலான சுலோகங்கள். Aditya Hrudhayam Stotram / Sloka from 16-20 lyrics in tamil – Devotional hymn to Aditya or the Sun God (Surya) and was recited by the sage Agastya to Rāma Tamil Lyrics

============

ஆதித்ய ஹ்ருதயம் (16 முதல் 20 வரை)

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாத்ரயே நம:

ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதி பதயே நம:

nama: puurvaaya girayE pascimaathrayE nama:

jyOthir ganaanaam pathayE dinaathi pathayE nama:

நம: – வணக்கங்கள்.

பூர்வாய கிரயே – கிழக்கு மலையில் உதிப்பவருக்கு. இந்த ஸ்தோத்ரம் ராம ராவண யுத்தத்திற்கு முன்னர் உபதேசிக்கப்பட்டதால் இலங்கையில் இந்த ஸ்தோத்ரம் தோன்றியதாகக் கூறலாம். தமிழகத்தில் சூரிய உதயம் கடலில் நடக்கும். இலங்கையில் கிழக்கு திசையில் ஏதேனும் மலை இருக்கிறதா; அந்த மலையைத் தான் இங்கே உதயசூரியனின் மலை என்று சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பஸ்சிமாத்ரயே – மேற்கு திசையில் மறைபவருக்கு

ஜ்யோதிர் கணானாம் பதயே – ஒளிக்கூட்டங்களின் தலைவருக்கு

தினாதி பதயே – நாளின் தலைவருக்கு

நம: – நமஸ்காரங்கள்

ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:

நமோ நம: சஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

jayaaya jayabhadraaya haryasvaaya namO nama:

namO nama: sahasraamsO aadhityaaya namO nama:

ஜயாய – வெற்றி வடிவானவருக்கு

ஜயபத்ராய – வெற்றியெனும் மங்கலத்தைத் தருபவருக்கு

ஹர்யஸ்வாய – பச்சை நிறக்குதிரையை உடையவருக்கு

நமோ நம: – மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

சஹஸ்ராம்சோ – ஆயிரக்கணக்கான பகுதிகளை/கதிர்களை உடையவருக்கு

ஆதித்யாய – அதிதியின் மகனுக்கு

நமோ நம: – மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம:

நம: பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நம:

nama ugraaya viiraaya saarangaaya namO nama:

nama: padmaprabhOthaaya maarthaandaaya namO nama:

நம: – வணக்கங்கள்

உக்ராய – உக்கிரமானவருக்கு

வீராய – வீரம் உடையவருக்கு

சாரங்காய – கதிர்கள் என்னும் அம்புகளை ஏவும் வில்லை உடையவருக்கு

நமோ நம: – மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

பத்மப்ரபோதாய – தாமரையை மலரச் செய்பவருக்கு; இதயத் தாமரையை மலரச் செய்பவருக்கு; ஞானத்தை வழங்குபவருக்கு

மார்தாண்டாய – மிக்க வலிமை பொருந்தியவருக்கு

நமோ நம: – மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய சூர்யாய ஆதித்ய வர்சஸே

பாஸ்வதே சர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

brahmEsaanaacyutEsaaya suuryaaya aaditya varchasE

bhaasvathE sarva bhakshyaaya roudraaya vapusE nama:

ப்ரஹ்ம ஈசான அச்யுத ஈசாய – பிரமன், ஈசானன் என்னும் சிவன், அச்சுதன் என்னும் விஷ்ணு என்னும் மூவருக்கும் தலைவராக இருப்பவருக்கு

சூர்யாய – சூரியனுக்கு

ஆதித்ய வர்சஸே – ஆதித்யன் என்ற பெயர் உடைய ஒளிர்பவருக்கு

பாஸ்வதே – மிகுந்த ஒளியை வீசுபவருக்கு

சர்வ பக்ஷாய – அனைத்தையும் உண்பவருக்கு; கால உருவானவருக்கு

ரௌத்ராய – பயத்தை உண்டாக்குபவருக்கு

வபுஷே – ஒளிரும் திருமேனியை உடையவருக்கு; உலகங்களையும் உயிர்களையும் உடலாக உடையவருக்கு

நம: – வணக்கங்கள்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாய அமிதாத்மனே

க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

tamOgnaaya himagnaaya satrugnaayamithaathmanE

krutagnagnaaya dEvaaya jyOthisaam pathayE nama:

தமோக்னாய – இருளை அழிப்பவருக்கு

ஹிமக்னாய – குளிரை அழிப்பவருக்கு

சத்ருக்னாய – எதிரிகளை அழிப்பவருக்கு

அமிதாத்மனே – எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருக்கு; எல்லா உலகங்களுக்கு உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு

க்ருதக்னக்னாய – செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு

தேவாய – ஒளி வீசுபவருக்கு

ஜ்யோதிசாம் பதயே – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு

இந்த ஆதித்ய ஹ்ருதயம் -16-20 | aditya hrudhayam stotram 16 20 பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Stotram, Mantras, Surya Deva Songs, சூரிய‌ தேவன் பாடல்கள், Aditya Hridayam ஆதித்ய ஹ்ருதயம் -16-20 ஆதித்ய ஹ்ருதயம் – 16-20 போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment