Unai padum thozhil antri veru illai Muruga Murugan Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை, சௌந்தர்ராஜன் முருகன் பாடல் வரிகள். Unai padum thozhil antri veru illai Muruga Song Lyrics,TM Soundarrajan Tamil Devotional Song.
============
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா
இந்த | unai padum thozhil antri veru illai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…